Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு

Breaking News LIVE: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான, பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் அப்டேட்களை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 28 Sep 2024 09:50 PM
மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகசிம் நியமனம்


மெய்யநாதன் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு. 


மனோ தங்கராஜ். செஞ்சி மஸ்தான், K ராமசந்திரன் விடுப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு


வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் நியமனம்


 

கோட்டையில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதற்கு உரிமையை பெற்று தந்தவவர் கலைஞர்தான் ‌ - முதல்வர் ஸ்டாலின் 

அதிகாரம் நிறைந்ததாக மாநிலங்களை மாற்ற வேண்டும். அதனால்தான் மாநில சுய ஆட்சி வேண்டுமென இறுதி மூச்சாக பாடுபட்டார்



கோட்டையில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றுவதற்கு உரிமையை பெற்று தந்தவவர் கலைஞர் தான் ‌ - முதல்வர் ஸ்டாலின் 

திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது - முதல்வர் ஸ்டாலின்

திமுக என்ற  மூன்று எழுத்தில் தான், மூச்சும்,  பேச்சும் உயிரும் உணர்வும்  உள்ளது


நாம் கூட்டணி அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தேர்வு வெற்றி பெற்றுள்ளோம் என்றால், நமது கூட்டணி வெற்றி கூட்டணி.


 


தமிழ்நாட்டில் நாம் அமைத்த கூட்டணியை பார்த்து தான் அகில இந்திய லெவல் பாஜகவை வீழ்த்த , இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்

பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது “ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக திமுக உள்ளது. தேர்தலுக்காக மட்டும் செயல்படும் கட்சி திமுக இல்லை. 


பவள விழா காணும் திராவிட முன்னேற்ற கழகம், இந்திய அளவில் அனைத்து அரசியல் இயக்கங்களுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு மகத்தான பேரியக்கமாக இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழிகாட்டும் இயக்கமாக திமுக உள்ளது. தேர்தலுக்காக மட்டும் செயல்படும் கட்சி திமுக இல்லை


கலைஞர் முன்னிலையில், தமிழர் தலைவர் ஆசிரியர் பேசினார். அப்போது திராவிட இயக்கத்தின் மூன்றாவது குழலாக விசிக இருக்கிறது என தெரிவித்தார். திராவிடர் கழகம் முதல், திமுக இரண்டாவது குழல், விசிக 3வது குழல் என தெரிவித்தார்.

சனாதன சக்திகளை எதிர்ப்போம் - திருமா

என்றென்றும்  விடுதலை சிறுத்தை கட்சி ,  தி.க , திமுகவுக்கு அடுத்ததாக, மூன்றாவது ஊது குழலாக இருப்போம் என தெரிவித்துக்கொள்கிறேன். சனாதன சக்திகளை எதிர்ப்போம் - திருமா

காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சு

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அனைத்து சாதிகளுக்கும் சமநீதி வழங்க வேண்டும். கோடான கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்"


காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் திமுக பவள விழாவில் த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சு

"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்"

அண்ணா வீட்டில் மாதிரி செலுத்திய பிறகு வருகை பதிவேட்டில் முதல்வர் ஸ்டாலின், எழுதியது "மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்"

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் வருகை

பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் தமிழக முதலமைச்சர் வருகை


திமுகவின் 75வது ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம்  காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20  கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 


இதற்கு கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தந்த நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மேலும் 300 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், மேலும் 300 பேர் உயிரிழப்பு!


ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல்!

தொழிற்சாலையின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ராணிப்பேட்டை: சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அத்தொழிற்சாலையின் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் மேலும் கரூர், திருவண்ணாமலை ஆகிய 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதற்கட்ட பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!

ஒடிசாவில் இணைய சேவை முடக்கம்!

பேஸ்புக்கில் வெளியான சர்ச்சை பதிவு காரணமாக ஒடிசா மாநிலத்தில் இரு மதப்பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்துள்ள நிலையில், பத்ரக் மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்

 


கூகுள் மேப் மூலம் எஸ்.பி.ஐ ஏடிஎம் இருக்கும் இடங்களை கண்டறிந்து கொள்ளையை அரங்கேற்றியுள்ளது மேவாட் கும்பலின் வழக்கமாக இருந்துள்ளது. ஏடிஎம் மையத்தில் நுழைந்த 15 நிமிடங்களில் மொத்த பணத்தையும் அள்ளிச்சென்று விடுகின்றனர். 


கேரளாவில் 3 வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த ரூ.65 லட்சம் பணத்துடன் கேரளாவில் 2 சுங்கச் சாவடிகளில் தப்பித்த கண்டெய்னர் லாரி, தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் பிடிபட்டுள்ளது. கொள்ளையர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட, ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளோரை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது

Breaking News LIVE: காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

காஞ்சிபுரத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். மேலும் திமுக பவளவிழா பொதுக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சித் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர். 

Breaking News LIVE: கடலோர காவல்படையில் வேலை: மோசடியில் சிக்கிய ஊழியர் மீது வழக்கு 

 


கடலோர காவல்படையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல்படையில் கார்பெண்டர் ஆக பணியாற்றும் நாராயணன் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


பெரம்பூரைச் சேர்ந்ஹ வெங்கட் ராவ் என்பவரிடம் ரூ. 6 லட்சம் மோசடி செய்த புகாரில் நாராயணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: லெபனான் மீது பொழியும் குண்டுமழை - இஸ்ரேல் தாக்குதலால் வெளியேறும் மக்கள்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் மேலும் 300 பேர் உயிழந்தனர். ஐநாவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசி முடித்ததை தொடர்ந்து லெபனான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 


தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 300 பேர் பலியாகியுள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள், தலைமையகத்தை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. 


பெய்ரூட் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அங்குள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். 

Background


  • காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவள-விழாக் கூட்டம் - முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

  • குமாரபாளையம் அருகே பிடிபட்ட ஏ.டி.எம்., கொள்ளையர்களிடமிருந்து 67 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் - கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தீவிர விசாரணை

  • காஞ்சிபுரம், திருப்பத்தூர், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை - இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்

  • தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி மறைவு - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

  • தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று தொடங்குகிறது - 9 நாட்கள் விடுமுறையுடன் அக்.7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

  • தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் மீது புகார் - வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

  • 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 350 ஆக உயர்த்த திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்

  • காவல்துறையின் கட்டுப்பாடுகளால் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து - தன்னை தடுக்கும் ஆந்திர அரசு, நாளை பட்டியல் இனத்தவர் செல்வதை தடுக்குமா என கேள்வி

  • புனே மெட்ரோ ரயில் சேவை - நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

  • இஸ்ரேல் தொடர் குண்டு மழை - சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்

  • அணுசக்தியில் இயங்கும் சீன நீர்மூழ்கி கப்பல், கட்டுமானத்தின் போதே தண்ணீரில் மூழ்கியதாக அமெரிக்க ராணுவம் தகவல்

  • திருச்சபைகளில் பாலியல் சம்பவங்கள் மூடிமறைப்பு: போப் முன்னிலையில் பெல்ஜியம் பிரதமர் விமர்சனம்

  • முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சரான ஷீகெரு இஷிபா ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

  • இந்தியா-வங்கதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி - 2வது நாளான இன்றும் மழை குறுக்கிட அதிக வாய்ப்பு

  • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய ஆலோசகராக த்வெயின் பிராவோ நியமனம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.