Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 26 Sep 2024 08:40 PM
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை

471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. நீதிபதியின் உத்தரவை அடுத்து சிறையில் இருந்து வெளியே வர உள்ள செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு வெளியே காத்திருக்கும் திமுக தொண்டர்கள்

Breaking News LIVE, Sep 26: பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்
கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு

“கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும்” சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Meiyazhagan Movie Review : கார்த்தி அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் பட திரை விமர்சனம்..

Meiyazhagan Movie Review : கார்த்தி அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் பட திரை விமர்சனம்.. இதோ, க்ளிக் செய்க 


 

Breaking News LIVE: அவதூறு வழக்கு: சஞ்சய் ராவத்திற்கு 15 நாட்கள் சிறை தண்டனை

பாஜக தலைவர் கீர்த்தி சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில் சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத்திற்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

Breaking News LIVE:புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு பாதிப்பு 

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்திற்கு டெங்கு பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், மூலக்குளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking News LIVE: தமிழக ஆழ்கடலில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி, வேதாந்த நிறுவனங்கள் போட்டி 

 


தம்ழிஅகத்தின் தென் முனையில் கன்னியாகுமரி அருகே ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய எரிசக்தி இயக்குனகரத்தின் திறந்த வெளி அனுமஹ்டி அடிப்படையில் 9வது சுற்று ஏலம் விடப்படும். செப்.21 வரை அவகாகசம் இருந்த நிலையில் ஓ.என்.ஜி.சி, வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பம் செய்துள்ளன. 

Breaking News LIVE: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 


தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து ஜாமீன் வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று தீர்ப்பு வருகிறது. 

தொடரும் மழை! சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

புதிய அதிபர் பதவியேற்புக்கு பின் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்ற பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ஆழ்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக தமிழக மீனவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சென்னையில் காலை 10 மணி வரை மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background


  • சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது – பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

  • சென்னையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் கடும் பாதிப்பு – பயணிகள் அவதி

  • மகாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழை – பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

  • தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி

  • மும்பையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த வெள்ளம் – பொதுமக்கள் அவதி

  • தொடர் கனமழையால் மும்பையில் மின்சார ரயில்கள் ரத்து; விமான சேவைகளும் ரத்து – பயணிகள் பெரும் அவதி

  • ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

  • போலி பத்திரம் மூலம் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்த வழக்கு; பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. ரவீந்திரநாத் கைது

  • புதுச்சேரியில் பரவும் டெங்கு காய்ச்சல் – சுகாதாரத்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனை

  • குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் தொடர்ந்து 14 மணி நேரம் விசாரணை; மனிதநேயத்திற்கு எதிரானது என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

  • பெங்களூரில் பெண்ணை 30 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த வழக்கு; முக்கிய குற்றவாளி ஒடிசாவில் தற்கொலை

  • வார விடுமுறை மற்றும் காலாண்டு விடுமுறை; நாளை முதல் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

  • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து சொத்துக்கள் அபகரிப்பு – காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி பயணம் – நாளை பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்

  • ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற 2ம் கட்ட தேர்தல்; 56 சதவீத வாக்குப்பதிவு

  • ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா,ஜ.க.வின் ஆட்சி அமையாது – மெகபூபா முக்தி

  • மாநிலத்தில் மதக்கலவரத்தை தூண்ட ஆர்.எஸ்.எஸ். ஊடுருவுகிறது – ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் விமர்சனம்

  • விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க.வின் சதியை இந்தியா கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது; வேளாண் சட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும் – ராகுல் காந்தி

  • நீட் தேர்வு குளறுபடி வழக்கு; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அவகாசம் கேட்டது

  •  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.