Breaking News LIVE 26th OCT 2024: எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 26 Oct 2024 09:08 PM
"ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்"

"ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல வேண்டாம்" என்பதை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் மாம்பலம் ரயில் நிலைத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையர் ராஜய்யா, மாம்பலம் ஆர்பிஎப் ஆய்வாளர் பர்ஷா பர்வீன் உள்ளிட்டோர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

மதுரை மாட்டுத்தாவணி, புதூர், தல்லாகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

மதுரை மாட்டுத்தாவணி, புதூர், தல்லாகுளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் மதுரை மாசி வீதிகளில் களைகட்டும் ஷாப்பிங்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் மதுரை மாசி வீதிகளில் களைகட்டும் ஷாப்பிங்!


 


மதுரையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தபோதும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் புத்தாடை, பட்டாசு, வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க அதிகளவில் குவிந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு குவிந்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 350-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

சாத்தனூர் அணை 9 கண் மதகு வழியாக தென்பெண்ணை ஆற்றில் 1300 கன அடி தண்ணீர் திறப்பு..

சாத்தனூர் அணை 9 கண் மதகு வழியாக தென்பெண்ணை ஆற்றில் 1300 கன அடி தண்ணீர் திறப்பு..


119 அடி உயரம் கொண்ட அணையின் தற்போதைய நீர்மட்டம்113.75 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவு 7321 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், தற்போது 6180 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3370 கன அடியாக உள்ளது.

கனமழை பாதிப்புகள், நிவாரணப்பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மதுரை கனமழை பாதிப்புகள், நிவாரணப்பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்!

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் பாதையில் விழுந்த ராட்சத பாறையை அகற்றிய ரயில்வே ஊழியர்கள்! போக்குவரத்து சீரானதையடுத்து ரயில் சேவை வழக்கம்போல் தொடங்கியது!

நன்றி தெரிவித்த திருமாவளவன் எம்.பி., முத்தரசன், கே.பாலகிருஷ்ணன்

சாம்சங் நிறுவனத்தில் நடைபெற்றுவந்த தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு இடையேயான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு!

எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம் - விஜய், தவெக தலைவர்

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம். பெயரைப் போல சில விசயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லியே ஆக வேண்டும். அப்படித்தான் கடிதங்களில் சொன்னதையே இங்கு மீண்டும் வலியுறுத்தப்போகிறேன். காரணம்,எல்லா வகைகளிலும் எனக்கு நீங்களும் உங்கள் பாதுகாப்புமே முக்கியம்.ஆகவே,மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் நீங்கள் அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உங்களின் பாதுகாப்பானப் பயணத்தை எண்ணியபடியே மாநாட்டுக்கு வருவேன்.நீங்களும் அதை மனதில் வைத்தே வாருங்கள்.அப்படித்தான் வரவேண்டும். நாளை (27-10-2024) நமது மாநாட்டில் சந்திப்போம். மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.


- தோழமையுடன், உங்கள் விஜய்

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து

சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து மின்சார ரயில்களும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு! மாலை 5 மணிக்கு பிறகு, ஞாயிறு அட்டவணைப்படி ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்!

எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ₹4 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி தூத்துக்குடி எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ₹4 கோடி ரூபாய்க்கு விற்பனையான ஆடுகள்!

ஆயுதப்படை காவலர் முன்னெச்சரிக்கையாக கையில் துப்பாக்கியை எடுக்க, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு!

சென்னை: ரிசர்வ் வங்கியில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்ததால், பாதுகாப்புப் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் முன்னெச்சரிக்கையாக கையில் துப்பாக்கியை எடுக்க, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு வெடித்ததால் பரபரப்பு!


சந்தேசத்திற்கு இடமாக எந்த சம்பவமும் நடைபெறவில்லை என்றாலும், துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சுவற்றில் பட்டு விழுந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் இல்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை!

30 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

சென்னை திருவெற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு நேற்று 39 மாணவிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அரசு பொது மருத்துவமனையில் இருந்து 30 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்! தற்போது தனியார் மருத்துவமனையில் 3 பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒரு மணி நேரத்தில் அவர்களும் வீடு திரும்புவர் என தெரிவிக்கப்படுள்ளது!

மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.26) விடுமுறை!

மதுரை கிழக்கு, மதுரை வடக்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்.26) விடுமுறை!

தேனி மற்றும் மதுரை வடக்கு, கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டம் மற்றும் மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மற்றும் மதுரை வடக்கு, கிழக்கு தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டம் மற்றும் மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Background


  • மதுரையில் பெய்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் – வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி

  • மதுரையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் நோய்த்தொற்று உண்டாகும் அபாயம்

  • மதுரையில் பெய்த கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சாலைகள், குடியிருப்புகள்

  • மதுரையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள அமைச்சர், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

  • மதுரையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

  • மதுரையில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி. நேரில் ஆய்வு

  • மதுரையில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அக்டோபர் மாதம் அதிக மழைப்பொழிவு – இந்த மாதம் மட்டும் 100 மி.மீட்டர் வரை பதிவு

  • கனமழை காரணமாக தேனி மாவட்டத்திற்கு பள்ளிகள் விடுமுறை; மதுரை கிழக்கு. மதுரை வடக்கு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • தமிழ்நாட்டில் இன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி; ஒகேனக்கலில் 35 ஆயிரம் கன அடி நீர்வரத்து

  • திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை – அதிகாரிகள் தொடர் ஆய்வு

  • முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் உயர்வு; ரூபாய் 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

  • நாள் முழுதாலும் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரிடம் எதுவும் மிஞ்சவில்லை – சலூன்கடைகாரரிடம் உரையாடும் ராகுல்காந்தி வீடியோ

  • காற்று மாசு அதிகரிப்பதால் பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

  • திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • பாபா சித்திக் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடைய 7 பேர் கைது

  • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

  • மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட டாணா புயல் ; 2 பேர் உயிரிழப்பு – பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க உத்தரவு

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இந்தியா – இரண்டாவது இன்னிங்சிலும் அசத்தும் நியூசிலாந்து

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.