Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

Breaking News LIVE, Sep 25: உள்ளூர் தொடங்கி உலக நாடுகள் வரையிலான முக்கிய நிகழ்வுகளின், உடனடி தகவல்களை நீங்கள் இங்கே அறியலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 25 Sep 2024 11:17 AM
Breaking News LIVE: விவசாயிகளுக்கு எதிரான குற்றத்தை மோடி அரசு உணரவில்லை: மல்லிகார்ஜுன கார்கே

 


விவசாயிகளுக்கு எதிராக செய்த குற்றத்தை பாஜகவும் மோடி அரசும் உணரவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களை மீண்டும் அமல்படுத்துவது பற்றி பேசப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிராக துப்பாக்கி, கண்ணீர் புகை பயன்படுத்தியதை மக்கள் மறக்க மாட்டார்கள். 

Breaking News LIVE: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

 


சிறந்த கைத்தறி நெசவாளர்கள் 6 பேருக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். 6 பேருக்கு பரிசுத் தொகையான ரூ.20 லட்சம்த்துக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். சிறந்த வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 வடிவமைப்பாளர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கு தேர்வான 3 பேருக்கு பரிசுத் தொகை ரூ. 2.25 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. 

Breaking News LIVE: காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? - இன்று வெளியாகிறது அறிவிப்பு 

 


பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பள்ளி மாணவர்களின் காலாண்டு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் இவ்வாறு பதில் அளித்தார். 

Breaking News LIVE: புதுக்கோட்டை அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்பு 

 


புதுக்கோட்டை மாவட்டம் நமனசத்திரத்தில் காரில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரும் விஷமருந்தி இருப்பதாக போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றனர். விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Breaking News LIVE: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?

சபர்கந்தா, குஜராத் | ஹிம்மத்நகரில் கனரக வாகனம் மீது கார் மோதியது. போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவும் தகவல் இல்லை. விபத்துக்குள்ளான கார் சுக்குநூறாக உடைந்தது. 





Background


  • தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டுப்பெற நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - பிரதமரை சந்தித்து பல்வேறு திட்டங்களுக்கான நிதியை கோர முடிவு

  • சென்னை விமான நிலையத்தில் பிக்-அப் பாயிண்ட் மாற்றப்பட்டதால் கால்டாக்ஸி ஓட்டுனர்கள் பாதிப்பு - கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

  • யாரைக் கொல்லப்போகிறார்கள்  என்று தெரியாமலேயே நாட்டு வெட்குண்டு தயாரித்து கொடுத்ததாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி அப்பு போலீசார்டம் வாக்குமூலம்

  • ஆஸ்கருக்கு அனுப்ப 'லாபதா லேடீஸ்' திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  • மகாவிஷ்ணு விவகாரம் - தலைமை ஆசிரியர்கள் மீண்டும் சென்னைக்கு பணியிடமாற்றம்

  • சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் வரும் 27ம் தேதி பதவியேற்கிறார்

  • 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

  • ஜம்மு&காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு 

  • திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து விசாரிக்க குண்டூர் சரக டிஐஜி சர்வரேஸ்தா திரிபாதி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது ஆந்திர அரசு

  • லட்டு பிரசாதத்தில் புகையிலை பாக்கெட்டா? - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டமாக மறுப்பு

  • மூடா நில முறைகேடு விவகாரம் - ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விளக்கம்

  • இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுரா குமார திசநாயகே உத்தரவு - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு 

  • இலங்கையின் இடைக்கால பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமனம்

  • இஸ்ரேல் சரமாரியாக குண்டு வீசி தாக்குதலில் - லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 569 ஆக உயர்வு

  • இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக கூட்டம் இன்று நடபெறுகிறது - ஐபிஎல் குறித்து ஆலோசனை?

  • இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட அடுத்த மாதம் இந்தியா வருகிறது ஜெர்மன் ஆடவர் ஹாக்கி அணி 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.