Breaking News LIVE, Sep 24: லட்டு கலப்பட விவகாரம் : சிறப்பு விசாரணை குழு அமைந்தது
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மீனவர்கள் விவகாரம் உள்பட பல பிரச்னைகள் குறித்து இலங்கையின் புதிய அதிபர் அனுரா குமார திசாநாயக்கவுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார். அதில், "எனது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள மீனவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். மீன்பிடி குக்கிராமங்களில் உள்ள எளிய மக்களின் பொதுச் சொத்து என்பதால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மீன்பிடி கப்பல்களும் அவர்களுடன் விடுவிக்கப்பட வேண்டும்.
அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திரட்டி மீன்பிடி படகுகளை வாங்கியுள்ளனர். எனவே அவை சமூகச் சொத்துக்களாகக் கருதப்பட்டு அப்படியே திருப்பித் தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.09.2024) முகாம் அலுவலகத்தில், ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் இம்மாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் திரு. குகேஷ், திரு. பிரக்ஞானந்தா, செல்வி வைஷாலி மற்றும் அணியின் தலைவரான திரு. ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் 90 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி, வாழ்த்தினார்.
நடிகர் ஜெயம் ரவி, சென்னை ஈசிஆர் வீட்டில் இருக்கும் மனைவி ஆர்த்தியின் வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத்தரவேண்டும் என ர போலீஸில் புகார் அளித்துள்ளார்
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. விவாகரத்து விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில், ரவி இப்படியான புகாரை மனைவி ஆர்த்தி மீது அளித்திருப்பது இவ்விஷயத்தில் மேலும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
Breaking News LIVE, Sep 24: சென்னையில் பரவலாக மழை
சென்னையில் ஆயிரம் விளக்கு, வடபழனி, நுங்கம்பாக்கம், அசோக் நகர், கோடம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
நெல்லை மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தி வரும் பாதாளச் சாக்கடை திட்டம் மிகவும் மந்தமாக நடைபெறுவதாகக் கூறி, ஒப்பந்ததாரர்கள் தூங்கி விட்டார்கள் என்பதை நினைவுபடுத்தும் விதமாக பாய் மற்றும் தலையணையுடன் வந்து நூதன முறையில் மேயரிடம் மனு அளித்த பொதுமக்கள்
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 10 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை மாற்றம் உதயநிதிக்கு ஏற்றமாகவும் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும் என பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனவும் ஏமாற்றம் இருக்காது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழக முதலமைச்சர் அவரது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், புதியதாக கட்டப்பட்டுள்ள அரசுப்பள்ளி கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.
திரௌபதி, பகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை காசிமேட்டில் உள்ள வீட்டில் இருந்து மோகன் ஜியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்றதாக குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில் சபர்மதி ஆற்றை பிரதமர் மோடி சீரமைத்து உள்ளார். அதேபோன்று கூவம் ஆற்றை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் ராயப்பேட்டை, வண்ணார்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழு கிணறு, நீலாங்கரை தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெறுகிறது.
தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தின் 166வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 55 ஆயிரம் பேர் பட்டம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழ்கத்துக்கு துணைவேந்தர் இல்லாததால் தற்போது ஒருங்கிணைப்புக் குழு பல்கலைக்கழக நிர்வாகத்தை கவனிக்கிறது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிற்கு எதிரான வழக்கில் இன்று அந்த மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
Background
- மனித குலத்தின் வெற்றி என்பது ஒற்றுமையில்தான் உள்ளது – ஐ.நா.சபையில் பிரதமர் மோடி பேச்சு
- ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி அமெரிக்காவில் நேரில் சந்திப்பு
- லெபனான் நாட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 492 பேர் உயிரிழப்பு – உலக நாடுகள் வேதனை
- மதச்சார்பற்ற, சமதர்ம இந்தியாவை உருவாக்க ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் – சீதாராம் யெச்சூரி படத்திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
- வெளிநாட்டுப் பயணத்தில் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் குறித்து குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்
- இலங்கை கடற்படை விவகாரத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்சயப்படும் விவகாரத்தில் 40 எம்.பி.க்கள் எங்கே சென்றனர்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
- திருப்பதி லட்டு சர்ச்சை; திண்டுக்கல் நிறுவனத்திற்கு மத்திய தர பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
- லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை; திருப்பதி கோயிலில் மகா சாந்தி ஹோம பூஜை
- பிரபல ரவுடி ஜம்புகேஸ்வரனை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார் – திருச்சியில் பரபரப்பு
- ஊட்டியில் ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு
- கொடைக்கானல் மேல்பகுதியில் நிலவெடிப்பு ஏற்பட்ட பகுதியில் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜர் ஆகாத வழக்கு; சேலம் மாவட்ட ஆட்சியருக்கு வாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீதான முறைகேடு புகார் மீதான வழக்கு; இன்று நண்பகல் தீர்ப்பளிக்கிறது அந்த மாநில உயர்நீதிமன்றம்
- ஜம்மு காஷ்மீரில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் – 26 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -