Breaking News LIVE 24th OCT 2024: மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 24 Oct 2024 09:18 PM
மதுரையில் கனமழையால் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்

மதுரையில் கனமழையால்,  தரையிறங்க முடியாமல் 2  இண்டிகோ விமானங்கள் வட்டமடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொடைக்கானலில் நிலச்சரிவு

கொடைக்கானலில் நேற்று பெய்த மழை காரணமாக அடுக்கம், பெரியகுளம் செல்லக்கூடிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2வது நாளாக போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து, சாலையில் குவிந்த ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி, சாத் பண்டிகையை ஒட்டி கோவை - பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.

தீபாவளி, சாத் பண்டிகையை ஒட்டி கோவை - பீகார் மாநிலம் பாராவுனி இடையே இரு மார்க்கமாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கம்.


கோவையில் இருந்து வரும் 26ம் தேதி, நவம்பர் 2, 9 மற்றும் 16ம் தேதிகளில் பகல் 11.50 மணிக்கு புறப்படுகிறது மறுமார்க்கமாக பாராவுனியில் இருந்து வரும் 29ம் தேதி, நவம்பர் 5, 12 மற்றும் 19ம் தேதிகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படுகிறது

நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை : திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்

எதிர்வரும் நவம்பர் 2ம் தேதி தொடங்கும் கந்த சஷ்டியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் ஏற்பாடுகள் தீவிரம் 18 இடங்களில் பக்தர்கள் தங்க தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளன. 225 நிரந்தர கழிவறைகள், 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகின்றன வாகன நிறுத்தம், குடிநீர், எல்.இ.டி. திரைகள், கூடுதல் சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன

ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பெண், ஜாமின் கோரி மனு

சென்னை மெரினா லூப் சாலையில் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைதான பெண், ஜாமின் கோரி மனு. காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு! “தான் கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவர், தவறுக்கு தான் மன்னிப்புக் கோரியுள்ளேன்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது!

தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்!

தூய்மைப் பணியாளர்களுக்கு விருந்தளித்து நன்றி தெரிவித்த வேளச்சேரி ஏஜிஎஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள்!


சென்னையில் பெய்த கனமழையால் ஏஜிஎஸ் காலனி பகுதிகளில் சூழ்ந்த மழைநீர் வடியவும், தேங்கிய குப்பைகளை அகற்றவும் உழைத்த 120 பணியாளர்களுக்கு கெளரவம்!

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கூடுதல் நீர் திறப்பு.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் கூடுதல் நீர் திறப்பு.


அணைக்கு இன்று காலை நீர் வரத்து 3,438 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 6,000 கன அடியாக அதிகரிப்பு.


அணையில் இருந்து 3,313 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது நீர் வெளியேற்றம் 6,792 கன அடியாக அதிகரிப்பு

டெல்லியில் வரும் நவம்பர் 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம் நடக்க உள்ளது.

டெல்லியில் வரும் நவம்பர் 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம் நடக்க உள்ளது.


அக்டோபர், நவம்பர் மாதங்களில் காவிரி நீரை தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் பங்கீடு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநில பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

டாஸ் வென்ற நியூசிலாந்து! இந்தியா முதலில் பந்துவீச்சு

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையினர் இன்றும் சோதனை

10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

10 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அலர்ட்

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை கரையைக் கடக்கிறது ‘டாணா’ புயல்!

நாளை கரையைக் கடக்கிறது ‘டாணா’ புயல்!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!


மதுரை


திண்டுக்கல்


கரூர்


சிவகங்கை


புதுக்கோட்டை


திருச்சி

Background


  • தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை – பரிசுப் பொருட்கள், பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்

  • அரசு அலுவலங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவு பணம் பறிமுதல்

  • ராணிப்பேட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்

  • முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை 15 மணி நேர சோதனை

  • அமலாக்கத்துறை தனது வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை – முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

  • அமலாக்கத்துறையின் சோதனையை கண்டித்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் கார்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு

  • நாடாளுமன்ற கணக்கு குழு முன்பு செபி தலைவர் மாதவி புச் இன்று விளக்கம்

  • ராமநாதபுரம், ஈரோடு, தஞ்சை. தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை; தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு

  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டாணா புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது – நாளை அதிகாலை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும்

  • புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை முதல் நாளை இரவு வரை மூடல்

  • டாணா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக இந்தியா முழுவதும் 200 ரயில்கள் ரத்து – பயணிகள் சிரமம்

  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு வெற்றி கொள்கை திருவிழா எனறு பெயர் – தீவிரமாக நடக்கும் மாநாட்டு பணிகள்

  • த.வெ.க. அரசியல் மாநாட்டு பந்தலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் படங்கள்

  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

  • 5 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி – பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே நடந்த சந்திப்பில் முக்கிய பேச்சுவார்த்தை

  • மகாராஷ்ட்ரா சட்டசபைத் தேர்தல்; மகாவிகாஸ் கூட்டணியில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ்தாக்கரே கட்சிக்கு 85 இடங்கள் ஒதுக்கீடு

  • சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜார்க்கண்டைச் சேர்ந்த காய்கறி வியாபாரி – கைது செய்த போலீஸ்

  • இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் தொடக்கம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.