Breaking News LIVE: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 23 Sep 2024 09:36 AM
பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் மாட்டுக்கொழுப்பு சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டதால், அதற்கு பரிகாரமாக சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தும் அர்ச்சகர்கள்! காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

பணியழுத்தத்தால் உயிரிழந்த பெண் விவகாரம் : ஆத்ம சக்தி பற்றி பேசிய நிதியமைச்சர்

"ஆத்ம சக்தி வளர்ந்தால்தான் அழுத்தத்தை தாங்கும் அளவிற்கு உள்சக்தி வளரும். இறைவனை நன்பு. இறைவனை நாடு என சொல்லி வளர்க்க வேண்டும்" -ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சைக் கருத்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா, போலீசாரிடம் தப்பும் முயற்சியில் ஈடுபட்டதால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீது 5 கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தகவல்

ஹங்கேரியில் வரலாறு படைத்த இந்திய செஸ் அணி

ஹங்கேரியில் வரலாறு படைத்த இந்திய செஸ் அணி


புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆடவர் (ஓபன்) மற்றும் மகளிர் பிரிவில் தங்கம் வென்று சாதனை.


கோப்பைகளுடன் இந்திய வீரர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

இலங்கையின் புதிய அதிபர் திசநாயகே இன்று பதவியேற்பு

இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயேகே இன்று பதவியேற்கிறார். 

Background


  • பிரதமர் மோடியை வரும் செப்.27ம் தேதி நேரில் சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – நிதி ஒதுக்கீடு, புதிய கல்விக்கொள்கை முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டம்

  • உடல்நலக்குறைவால் பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

  • தமிழ்நாட்டில் இதுவரை நடப்பாண்டில் 14 ஆயிரம் பேருக்கு டெங்கு – பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது சுகாதாரத்துறை

  • சென்னையில் பிரபல ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை – போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது துப்பாக்கிச்சூடு

  • இலங்கை அதிபர் தேர்தலாலும், ஆட்சி மாற்றத்தாலும் எந்த பயனும் இல்லை – தமிழக அகதிகள் கருத்து

  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் – நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர களப்பணி

  • போதைப் பொருட்களை விற்பனை செய்ய ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே தி.மு.க. விற்பனைக்கு எடுத்துள்ளது – முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் குற்றச்சாட்டு

  • 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாவிட்டால் மாபெரும் போராட்டம் – தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

  • அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தின் திறப்பு விழா – ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் பங்கேற்பு

  • பிரதமர் மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சி என்று கூறுவதா? தமிழிசைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

  • அரசு மருத்துவமனையில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பயிற்சி பெண் மருத்துவர்கள் அவதி

  • இலங்கையின் அதிபராக வெற்றி பெற்றுள்ள அனுர குமார திசநாயகே இன்று பதவியேற்பு

  • இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசநாயகேவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

  • பிரதமர் மோடியை சரமாரிய விளாசிய டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மோகன் பகவத்திற்கு 5 கேள்விகளை எழுப்பினார்

  • திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் – சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்தது ஆந்திர அரசு

  • மேற்கு வங்க வெள்ள பாதிப்பு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் – பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

  • ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போரை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை – ரயில்வே அமைச்சகம் முடிவு

  • ராஜஸ்தானில் ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு சாதனை

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.