Breaking News LIVE 23rd OCT 2024: யூ டியூபர் இர்பான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்கத் தடை - சுகாதாரத்துறை

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 23 Oct 2024 06:48 PM
யூ டியூபர் இர்பான் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை 10 நாட்கள் மருத்துவம் பார்க்கத் தடை - சுகாதாரத்துறை

மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை யூடியூபர் இர்பான் காட்டிய விவகாரத்தில், அவரது மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் பார்க்கத் தடை விதித்துள்ளது. 

பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது

ரஷியாவின் கஸான் நகரில் நடந்துவரும் பிரிக்ஸ் நாடுகள் உச்சி மாநாட்டில், சீன அதிபர் ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது.


2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு தலைவர்கள் இடையே நடைபெறும் முதல் இரு தரப்பு பேச்சுவார்த்தை இதுவாகும்

'அமுதம் பிளஸ்' தொகுப்பு சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் வகையில் 15 பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' தொகுப்பு சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது! அக். 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்!

டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்

வேலூர் சிறையில் கைதி தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்!

கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித்திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட திருமால் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவி மீது, அங்கே சுற்றித் திரிந்த மாடு மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி! பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய நெரிசலான இடங்களில், மாடுகள் ஆங்காங்கே சுற்றி திரிவது போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக மக்கள் புகார். சாலைகளில் திரியும் மாடுகளால், தொடர் விபத்துகள் ஏற்படுவது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மாட்டின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!

Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், Rs.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை

Gold Rate : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், Rs.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை

இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சந்திப்பு!

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று சந்திப்பு!

வங்கக்கடலில் உருவானது டாணா புயல்! ஒடிசா, மே.வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

வங்கக்கடலில் டாணா புயல் உருவானது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் சோதனை

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்! இன்று முதல் முன்பதிவு

தீபாவளிக்காக தென் மாவட்டங்களுக்கு விடப்படும் சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு நடைபெற உள்ளது. 

Background


  • கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்கள்

  • திருப்பூர், ஈரோடு மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை - சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

  • கனமழை எதிரொலி; கோவை, திருப்பூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • விடாமல் பெய்த கனமழை; திண்டுக்கல் மாவட்டத்தில் சாலையில் விழுந்த ராட்சத பாறை

  • வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று டாணா புயலாக மாறுகிறது

  • டாணா புயல் காரணமாக ஒடிசாவில் 14 மாவட்டங்களில் வரும் 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

  • டாணா புயல் அச்சுறுத்தல்; மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழுவினர்

  • கோவை, திருப்பூர் மற்றும் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • பிரிக்ஸ் மாநாட்டிற்கு இடையே பிரதமர் மோடி – சீன அதிபர் இன்று சந்திப்பு

  • ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியா முழு ஆதரவு வழங்கத் தயார் – அதிபர் புதினிடம் உறுதியளித்த பிரதமர் மோடி

  • கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று வேட்புமனுத் தாக்கல்

  • வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வீடு, வீடாக சென்று வாக்குசேகரிப்பு

  • ரூபாய் 400 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு குற்றச்சாட்டு; அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுப்பு

  • அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தவறான தகவல் பரப்பியதாக கூறி மானநஷ்ட வழக்கு தொடுக்கப்படும் – தனியார் நிறுவனம்

  • கடந்த 1 வாரத்தில் 150க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் – ரூபாய் 500 கோடி வரை இழப்பு

  • திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நேரில் ஆஜராக உத்தரவு

  • ரேசன் கடைகளுக்கு பொருட்களை அனுப்பாமல் பொய் கணக்கு எகுழுதி கோடிக்கணக்கில் ஊழல் – நியாய விலைக்கடை பணியாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

  • திருச்சியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பள்ளிகளில் மோப்ப நாய்களுடன் போலீசார் தீவிர சோதனை

  • தீபாவளிக்காக தென்மாவட்டங்களுக்கு விடுக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு இன்று முதல் முன்பதிவு


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.