Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழர்கள் 11 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட 14 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு
பெண் காவலர்களுக்கு புதிய அறிவிப்பு
தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய பகுதிகளில் பணிபுரியலாம் - சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து இந்தியா சார்பாக மருத்துவ உதவிகளை வழங்கினார் பிரதமர் மோடி!
ரஷ்யா உடனான போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு, Project BHISHM திட்டத்தின்கீழ் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், கூடாரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது
சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், கோவை காந்திபுரம் பகுதியில் நடந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பலர் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
அதில், சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது போன்றும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆய்வு செய்வது போன்றும் தத்ரூபமாக செய்திருந்தனர் தனியார் பள்ளி மாணவர்கள். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் கணினி வெடித்து புகை சூழ்ந்ததால், மயக்கம் அடைந்த 20 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி - போலீசார் விசாரணை
பழனியில், நாளை (24.08.2024) தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் 200 கிராம் பஞ்சாமிர்தம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முத்தமிழ் முருகன் மாநாட்டில் 1,300 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட உள்ளன. அறநிலையத்துறை நடத்தும் மாநாட்டில் 15 ஆதினங்கள், 30 ஆன்மிக் சொற்பொழிவாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலை தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. 26 பிரச்சாரகர்கள் பட்டியலில் அஜித் பவார், பிரபுல் படேல் மற்றும் சுனில் தட்கரே உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அனில் அம்பானி உள்ளிட்ட 4 பேர் மற்றும் 24 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அனில் அம்பானிக்கு பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 25 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் யூனிகார்ன் என்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த பட்டியலில் உள்ளன. இந்த நிறுவனங்கள் கடன்கள் என்ற பெயரில் மற்ற நிறுவனங்களிடம் இருந்து நிதியைப் பறிக்க திட்டமிட்டதாக செபி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நேபாளத்தில் 40 பயணிகள் சென்ற பேருந்து எதிர்பாரா விதமாக ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 14 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்காப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக நேபாள காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளர்.
தொழிலாளார் நலத் திட்டங்களால் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.ரூ.1,551 கோடி மதிப்பில் 20 நல வாரியங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசவும் பாடவும் தடை விதித்து புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது தாலிபன் அரசு. பெண்கள் தனியாகவோ உறவு முறை இல்லாத ஆண்களுடன் பயணிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்கள் நீதி மையம் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதால் அது தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்.
போலந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேச உள்ளார்.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.
வர்த்தக நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்து 81,019.33 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 12.75 புள்ளிகள் உயர்ந்து 24,82630 ஆக வர்த்தகமாகியது.
காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8,563 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 7,463 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 6,501 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பிரபாகர் பொறுப்பேற்றார்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ. 6,660க்கும் சவரன் ரூ.53,,280க்கும் விற்பனையாகிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.91.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து விற்பனையாகி வருகிறது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தையும் தலையில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் இன்று உயிரிழந்தார்.
Background
- போலந்து நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து ரயில் மூலமாக உக்ரைன் நாட்டுக்கு புறப்பட்டார்
- உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கியை சந்திக்கும் பிரதமர் மோடி அவருடன் போர் நிறுத்தம் குறித்தும் பேச உள்ளார்.
- பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 11 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவர்கள் தங்களது போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
- பெண் மருத்துவர் பாலியன் வன்கொடுமை செய்து கொலை; மருத்துவமனை முன்னாள் முதல்வர் உள்பட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு
- ஆந்திராவில் மருத்துவ ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1 கோடி நிதி – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
- தமிழ்நாட்டில் அடுத்த 2 மாங்களில் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்ப விழா – ஆளுநர் ஆர்.என்.ரவி
- தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார் நடிகர் விஜய் – தொண்டர்கள் உற்சாகம்
- விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானையின் உருவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு
- தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியரை கைது செய்த சுகாதாரத்துறை
- பள்ளி மாணவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியதா காவல்துறை? – சிவகங்கையில் பரபரப்பு
- சென்னையில் சூப்பர் மார்க்கெட்டின் உள்ளே நுழைந்து மாமூல் கேட்ட ரவுடி கைது
- வெம்பக்கோட்டை அகழாய்வில் பவள மணியில் சீறும் காளை கண்டுபிடிப்பு
- பிரிஜ்பூஷன் மீது பாலியல் குற்றம் சாட்டிய வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அகற்றமா? டெல்லி காவல்துறை விளக்கம்
- வெனிசுலா நாட்டு அதிபர் மதுரோ வெற்றி பெற்றது செல்லும் – அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -