Breaking News LIVE: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 21 Sep 2024 11:30 AM
Srilanka Election 2024: ஜனநாயகத்தை வீழ்ச்சியடையாமல் பாதுகாப்பது அவசியம் -  இலங்கைஅதிபர் ரணில் விக்ரமசிங்க

வாக்களித்த பின்பு இலங்கை அதிபர் பேசியதாவது  "நாங்கள் அரசாங்கத்தையும் ஜனநாயக அமைப்பையும் நிலைப்படுத்தியுள்ளோம். எனவே, மக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமையைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இப்போது இருக்கிறோம்.


ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும் ஜனநாயக அமைப்பு வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் இருப்பதும் அவசியம். என்னல், அதற்குரிய பங்களிப்பை வழங்க முடிந்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் வாக்களித்த பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 





சஜித் பிரேமதாச வாக்களித்தார்

 ஐக்கிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாச,  ராஜகிரிய கொடுவேகொட விவேகராம புராண விகார  பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்

Srilanka Election 2024: சட்டத்திற்கு உட்பட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் - இலங்கை தேர்தல் ஆணையம்
 Srilanka Election 2024: இலங்கை அதிபர் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மலையக பெருந்தோட்ட மக்கள்
Srilanka Election 2024: வாக்களித்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க.!

 Srilanka Election 2024: ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 17 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் ஒன்பதாவது அதிபரை தேர்ந்தெடுக்க தகுதி பெற்றுள்ளனர்.


இந்நிலையில், தற்போதைய அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்க வாக்களித்தார்.





இலங்கை அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் பெற்றுள்ள 5 வேட்பாளர்கள்.!
Srilanka Election 2024: விறுவிறுப்பாக நடைபெறும் இலங்கை தேர்தல்: 1.7 கோடி வாக்காளர்கள்..!
Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய கூறுகள் என்னென்ன?


 


Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய கூறுகள் என்னென்ன?


Srilankan Election LIVE : இலங்கை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் விஷயங்களாக இருக்கப்போவது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி, வரிவிதிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவையாகும்





 

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!

கர்நாடக மாநிலத்தில், தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு, ஊதியத்துடன் ஆண்டுக்கு 6 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆலோசனைகளுக்குப் பிறகு சட்டம் கொண்டுவரப்பட்டு அமலாக்கப்படும் எனவும் தகவல்.

ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு

ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டியில் நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இலங்கையில் தொடங்கியது அதிபர் தேர்தல் - மும்முரமாக நடக்கும் வாக்குப்பதிவு

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..

சென்னை: அண்ணா சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பெயர் பலகை தூணில் மோதி அப்பளம் போல் நொறுங்கி விபத்து! இதில் காயமடைந்து காருக்குள் சிக்கிய 18 வயதான இளைஞரை மீட்ட போலீசார், அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் நண்பர்களுடன் டீ குடித்துவிட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்கிறார்.

Background


  • மணிப்பூரில் ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை – உச்சகட்ட பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர்

  • ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் – பயங்கரவாதிகள் இடையே கடும் மோதல்; ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை

  • டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவியேற்பு – ஆம் ஆத்மியினர் உற்சாகம்

  • மத்திய அரசின் உண்மை சரிபார்க்கும் குழுவை ரத்து செய்தது மும்பை உயர்நீதிமன்றம்

  • சென்னை, விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய மழை – மக்கள் மகிழ்ச்சி

  • பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை தொடங்கும் நாளில் ரயில் மறியல் போராட்டம் – இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி 4 மாவட்ட மீனவர்கள் அறிவிப்பு

  • கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை; சி.பி.ஐ. அலுவலகம் நோக்கி இளநிலை மருத்துவர்கள் பிரம்மாண்ட பேரணி

  • கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.

  • குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று அமெரிக்காவிற்கு புறப்படுகிறார் பிரதமர் மோடி – நாளை மறுநாள் ஐ.நா. சபையில் உரையாற்றுகிறார்

  • கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் தூய்மை பணியாளர் படுகாயம்

  • ரஜினிகாந்தின் வேட்டையன் இசை வெளியீடு; போலி டிக்கெட்டுடன் பலர் பங்கேற்றதாக புகார்

  • பா.ஜ.க.வால் பாவப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட அ.தி.மு.க. மீண்டுவர வேண்டும் – அமைச்சர் உதயநிதி

  • கார் ரேஸ் நடத்தும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லையா? முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி

  • இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு – பெரும் எதிர்பார்ப்பு

  • காஷ்மீரில் நடைபெற்ற விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழப்பு

  • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்

  • காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும் – பிரதமர் மோடி பேச்சு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.