Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 21 Oct 2024 07:49 PM
Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Breaking News LIVE: முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இந்து அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோவை: உக்கடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து அறநிலையத்துறை சார்பில் 20 இணைகளுக்கு வெகு சிறப்பாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 4 கிராம் தங்கம், மிக்ஸி, கட்டில் என ₹1.20 லட்சம் மதிப்பிலான 45 வகையான சீர் வரிசைகள் வழங்கப்பட்டன.

முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது வங்கதேசம்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது வங்கதேசம். ரபாடா, மகாராஜ் மற்றும் முல்டர் ஆகியோர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின்

"அறநிலையத்துறையின் பணிகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.. பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துபவர்களால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை” ‘பராசக்தி’ பட வசனத்தை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!

“தவெக மாநாட்டுக்கு அழைப்பு வந்தா போவேன்... நான் ஏற்கனவே அரசியல்வாதிதான்” - விஷால்

“தவெக மாநாட்டுக்கு அழைப்பு வந்தா போவேன்... நான் ஏற்கனவே அரசியல்வாதிதான்”


- சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேட்டி

"கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் "கனவு ஆசிரியர்" விருது பெற்ற 55 ஆசிரியர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background


  • மத்திய கிழக்கு வங்க்கடல் மற்றும் வடக்கு அந்தமானில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • திருப்பூரில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு – வாகன ஓட்டிகள் அவதி

  • விமானங்களுக்கு அச்சுறுத்தும் ஏற்படுத்தும் வகையிலான தொடர் மிரட்டல்களுக்கு விரைவில் தீர்வு – மத்திய இணையமைச்சர்

  • டெல்லியில் உள்ள பள்ளி அருகே குண்டுவெடிப்பு – என்.ஐ.ஏ., என்.எஸ்.ஜி. சோதனை – பெரும் பரபரப்பு

  • டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் – ஆம் ஆத்மி; பா.ஜ.க. பரஸ்பர குற்றச்சாட்டு

  • விமானம் மூலம் நாளை சேலம் வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – டிரான்கள் பறக்கத் தடை

  • கூட்டணி கட்சிகளை தி.மு.க. தாங்கி நிற்கிறது; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  • 10 ஆண்டுகளாக ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்பாதது ஏன்? மோசமான நிர்வாகத்தால் தொடரும் விபத்துக்கள்

  • மக்கள் விரும்பும் மாற்றங்களே அரசின் முதன்மையான தேவை – வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு

  • மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 5வது வேட்பாளரை அறிவித்தார் அகிலேஷ் யாதவ்

  • தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் பேசியது வருத்தம் அளிக்கிறது – அமைச்சர் அன்பில் மகேஷ்

  • புதுச்சேரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேஷன் கடைகள் இன்று திறப்பு

  • திருவள்ளூர் அருகே மழை காளானை சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக்குறைவு

  • பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்கிறார்கள் கனவு ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

  • ஆந்திராவில் கருவுறுதல் விகிதம் அதிகரிக்க ஆந்திர புதிய அரசு திட்டம்

  • நாட்டில் அம்பானி, அதானிக்கே வளர்ச்சி; மக்களுக்கு அல்ல – மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்

  • குழந்தைகளை வளர்க்க முடியவில்லையா? எங்களிடம் கொடுங்கள் - சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்

  • புதுச்சேரியில் கடல் நீர் தினம் தினம் நிறம் மாறுவதால் மக்கள் அச்சம் – ஆய்வாளர்கள் ஆராய்ச்சி

  • சுகாதாரத்துறை அமைச்சர் மட்டும் வேகமாக நடந்தால் போதாது; சுகாதாரத்துறை வேகமாக நடக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.