Breaking News LIVE 20th OCT 2024: இன்று 6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - எங்கெல்லாம் தெரியுமா?

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 20 Oct 2024 01:32 PM
8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-25) போட்டிக்கான புள்ளிப்பட்டியல் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது இந்திய அணி

பேட்மிட்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்த அன்புமணி ராமதாஸ் ...

சென்னையில் - தமிழ்நாடு உடற்கல்வி பல்கலைக்கழகம் அரங்கத்தில் தேசிய அளவில் நடைபெறும் 36-வது SUB - JUNIOR BADMINTON CHAMPIONSHIP - 2024 போட்டியை துவக்கி வைத்து, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து 

"துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்திருக்காது" : மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு

"திமுக இல்லை என்றால் இந்தியாவில் துணை ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்திருக்காது" - சென்னை ஓட்டேரியில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டத்தில் மாநிலங்களைவை உறுப்பினர் திருச்சி சிவா பேச்சு

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் கவலை

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.. விவசாயிகள் கவலை


திருவண்ணாமலை: ஆரணி அருகே கொருக்கதூர், நாவல்பாக்கம், பிலாந்தி, மணலவாடி, வண்ணாந்தாங்கல், தேவநத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஆற்றுக்கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கால்வாய் உடைந்து, 500 ஏக்கருக்கும் மேலாக பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் நாசமாகின.

ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் சொன்னது உண்மையில்லை

"பக்கவாதத்தை வென்றிடுவோம்" : பதாகை ஏந்தி வாக்கத்தான் சென்றனர்.

மதுரை தொப்பக்குளத்தில் மக்களுக்கு புரியும் வகையில், ஆடிப் பாடி மூளை பக்கவாதத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவிகள். "துரிதமாக செயல்படுவோம்.. பக்கவாதத்தை வென்றிடுவோம்.." பதாகை ஏந்தி வாக்கத்தான் சென்றனர்.

கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம்

கும்பகோணத்தில் இன்று அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்கள் அவதி. முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்கள்

Background


  •  சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறி இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை - தொடர்ந்து 3 நாளாக நள்ளிரவில் மழை, பகலில் வெயில் என்ற சூழல் நிலவி வருகிறது

  • வங்கக் கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • காஞ்சிபுரம், வேலூர், சிவகங்கை, உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழை... கோபி அருகே தற்காலிக பாலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு

  • திராவிட வாக்கியம் விடுபட்ட விவகாரம் - தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் விசாரணை

  • தமிழ்நாட்டின் போட்டி நாடுகளோடு தான், மாநிலங்களுடன் அல்ல- தொழில்வள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

  • பிரிவினைவாதம் என்பது எங்களிடம் துளி கூட இல்லை - ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

  • துரோகிகளை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் வரை ஓய்வு கிடையாது - உத்தவ் தாக்ரே

  • பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் - ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

  • கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் - பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் 

  • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதிகோரி தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்... மருத்துவர்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

  • ஜார்க்கண்ட் சட்டபேரவை தேர்தலில் காங்கிரஸ் - ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டி.. பிற கட்சிகளுக்கு 11 இடங்களை ஒதுக்கவும் முடிவு

  • இந்தியா - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் - நியூசிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்கள் மட்ட்டுமே தேவை

  • ஐ.எஸ்.எல்., கால்பந்து: முகமைதன் மற்றும் கேரளா அணிகள் இன்று பலப்பரீட்சை

  • மகளிர் டி20 உலகக் கோப்பையை வெல்லப் போவது யார்? தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.