Breaking News LIVE : அனல் மின் நிலைய கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு வந்த சீமானுக்கு தி.மு.க. எதிர்ப்பு
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
எண்ணூர் அனல் மின் நிலைய விவகார கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்க வந்த சீமானுக்கு திமுக-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா உடல்நலக்குறைவால் காலமானார்.
திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்திலே இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா மற்றும் பா.ஜ.க. எம்.பி.க்களை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வாகனங்கள் மோதி ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாள் என்பதால் அனல் பறக்கும் விவாதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரியில் 6 ஆண்டுகளுக்குப் பின் பேருந்துக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் காலையிலே பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
Background
- நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு – எம்.பி.க்கள் கைகலப்பு விவகாரத்தால் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்ப்பு
- மக்களவையின் வெளியில் பா.ஜ.க. எம்.பி. கீழே விழுந்து உடைந்தது மண்டை – ராகுல் காந்தி தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு
- நாடாாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க. எம்.பி.க்கள் இடையே நடந்த தள்ளுமுள்ளால் பரபரப்பு
- ராகுல் காந்தி. மல்லிகார்ஜூனா கார்கே குண்டர்கள் போல செயல்பட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
- அதானி விவகாரத்தை திசைதிருப்ப மத்திய அரசு முயற்சி; பா.ஜ.க. எம்.பி.க்கள் திட்டமிட்டு கைகலப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு
- அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் – தி.மு.க., விசிக, காங்கிரஸ் போராட்டம்
- ஈரோடு விசைத்தறி பட்டறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- நாமக்கல்லில் குடிசைத்தொழிலாக இயங்கி வரும் தறிபட்டறைகளுக்கு வரி விதிக்க கணக்கெடுப்பு – அதிகாரிகளை சிறைபிடித்த மக்கள்
- தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தம் – எடப்பாடி பழனிசாமி
- சிறையில் உள்ள யூ டியூபர் சவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
- பெண்கள் திருமணத்தை வணிகமாக்கி கணவன்மார்களிடம் பணம் பறிக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்
- திண்டுக்கல் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியது
- அசாமில் வங்கதேச பயங்கரவாதி உள்பட 8 பேர கைது
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
- கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் விவகாரம்; முதலமைச்சர் மௌனமாக இருப்பது ஏன்? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
- ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 நாட்களாகியும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் அவதி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -