Breaking News LIVE 19th OCT 2024: கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 19 Oct 2024 11:06 AM
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

திருவண்ணாமலை: கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவிற்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு!

ஒரு நாள் சுற்றுலா பேருந்தை தொடங்கிவைத்த அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் கோவி .செழியன்

கும்பகோணம: சனி ,ஞாயிறு மற்றும் கார்த்திகை தினங்களில் கும்பகோணத்தில் இருந்து எட்டுக்குடி, என்கண் , சிக்கல், திருஏரகம், சுவாமி மலை, பொராவாச்சேரி ஆகிய ஆறு முருகன் கோயிலுக்கு செல்லும் வகையில், ஒரு நாள் சுற்றுலா பேருந்தை தொடங்கிவைத்த அமைச்சர்கள் சிவசங்கரன் மற்றும் கோவி .செழியன்

சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை

சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை! அண்ணா சாலை, தியாகராயர் நகர், ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாயநகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

கார்த்திகை தீபம் : பக்தர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சேகர் பாபு

கார்த்திகை தீபத்தன்று பக்தர்கள் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் வந்து செல்வதற்கு ஏதுவாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும்  செய்துள்ளோம். 


திருவண்ணாமலை கோவிலில் இருந்த யானை ருக்கு இறந்த நிலையில் புதியதாக யானை வாங்கப்படுமா என கேள்வி கேட்டதற்கு: 


தனியார் யாராவது அவர்கள் வளர்த்து வரும் யானையை திருக்கோவிலுக்கு யானை தர ஒப்புக் கொண்டால் அதனை பெற்றுக் கொள்ள முடியும். அந்த யானையும் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். தற்போது வனத்துறை சட்டத்தின் படி யானையை கொண்டு வரும் சூழல் இல்லை.


கார்த்திகை தீபத்து அன்று கோவிலில் உள்ள கடந்த ஆண்டு எந்த அளவுக்கு கூட்டம் இருந்ததோ அதே அளவுக்கு இந்த ஆண்டும் அனுமதிக்கப்படும். உள்ளே கூட்டத்தை கட்டுப்படுத்துவோம் முறையான ஏற்பாடுகள் செய்து கண்காணிக்கப்படும். 


கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உபயதாரர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

கன மழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று சனிக்கிழமை(19/10/24) விடுமுறை அளிக்கப்படுகிறது - கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம்

Background


  • முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டிக்காதது ஏன்? தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

  • ஆளுநர் ரவி பங்கேகேற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், திராவிட நாடு எனும் வாக்கியம் விடுபட்டதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம்

  • தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டதாக, மன்னிப்பு கோரி டிடி தமிழ் அறிக்கை

  • அதிமுகவை பலப்படுத்த நிறைய செய்ய வேண்டி உள்ளது - சசிகலா

  • சென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை - அண்ணாசாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

  • வழக்கு விசாரணைகள் விரைவில் நேரடி ஒளிபரப்பு - உச்சநீதிமன்றம் திட்டம்

  • பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ரஷ்யா செல்ல திட்டம்

  • மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் சொந்த கிராமத்திற்கு திரும்பியது

  • ஹரியானாவில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பக்கத்து வீட்டு பெண் உட்பட 4 பேர் பலி

  • உக்ரைன் போர் குறித்து அக்கறை - பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி

  • லெபனானுக்கு 11 டன் எடையிலான நிவாரணப் பொருட்களை அனுப்பிய இந்தியா

  • இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் சேர்த்து இன்னும் 125 ரன்கள் பின் தங்கியுள்ளது

  • மகளிர் டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணியை சுழலில் சுருட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி - நாளைய இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா உடன் மோத உள்ளது

  • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வர வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.