Breaking News LIVE 19th Nov 2024: டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன்
Last Updated:
19 Nov 2024 12:00 PM
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது - நீதிமன்றம்
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான இபிஎஸ் தொடர்ந்த வழக்கு - டிச.11ம் தேதி ஒத்திவைப்பு
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு வரும் டிசம்பர் 11ம் தேதி ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், தஞ்சை மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Background
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்
- டெல்லி மட்டுமின்றி உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் காற்று மாசு உச்சம்
- உத்தரபிரதேசத்திலும் மோசமாகும் காற்று மாசு; நொய்டா, காசியாபாத்தில் மூடப்பட்ட பள்ளிகள்
- முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல்; அவரது ஆதரவாளர்கள் போராட்டம்
- பிரேசிலில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் வறுமைக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் செயல்பட பிரதமர் மோடி அழைப்பு
- போர்கள் மற்றும் போர் பற்றத்தால் தெற்கு நாடுகள் கடும் பாதிப்பு – பிரேசிலில் பேசிய பிரதமர் மோடி
- ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு –முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
- ஜி20 மாநாட்டில் உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை – பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை
- ராணிப்பேட்டையில் ரூபாய் 1 கோடி கேட்டு இருவர் கடத்தல் – ஒருவர் கைது
- பல குற்ற வழக்குகில் தேடப்பட்டு வந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது
- கோவையில் சூறையாடிய காட்டு யானை- பொதுமககள், வியாபாரிகள் பீதி
- கலைக்கல்லூரி ஆசிரியர்களை மறுநியமனம் செய்து அரசாணை வெளியீடு
- மாநகர பேருந்துகளில் லக்கேஜ்களை ஏற்றிச் செல்வதற்கு புதிய விதிகள் அமல்
- தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
- பல மாநில இடைத்தேர்தலை ஒட்டி ரூபாய் 1000 கோடி பறிமுதல்
- மாநிலங்களுக்கான நிதி பகிர்வை உயர்த்தி வழங்க வேண்டும் – நிதி ஆணைய குழுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -