Breaking News LIVE: தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தைச் சந்தித்தார் விஜய்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 19 Aug 2024 08:28 PM
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்தைச் சந்தித்தார் விஜய்

நடிகர் விஜய் இன்று மாலை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்தை அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். THE GOAT திரைப்படத்தில் விஜயகாந்த் AI உருவம் பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்தார்

"வேறு எந்தெந்தப் பள்ளிகளில் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என விசாரணை" - ஆட்சியர் சரயு

"வேறு எந்தெந்தப் பள்ளிகளில் இது போன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலியாக என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம்... இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கம்.

உதகையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை

உதகையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை;


குந்தசப்பை என்ற கிராமத்தில் 50 அடி நீள தடுப்புச் சுவர் இடித்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசார்

ஆவணி மாத பெளர்ணமியை ஒட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் - பாதுகாப்பு பணிக்காக 1000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன

சில நேரம் நம்ம மேல வன்மம் வரத்தான் செய்யும் - இயக்குநர் பா.ரஞ்சித்

"சில நேரம் நம்ம மேல வன்மம் வரத்தான் செய்யும். வன்மத்துக்கு பதில் சொல்ற இடத்துல இருந்தா நம்ம காலி ஆகிடுவோம்" 'தங்கலான்' படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேச்சு

திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளம்.. கோயிலை சூழ்ந்த மழைநீர்..!

திருப்பூர்: மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் மழையால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீர் சூழ்ந்தது!

அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வந்த பிறகுதான் ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறோம் - அதியமான்

"அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வந்த பிறகுதான் ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறோம். உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற ஒரு சில தலைவர்கள் மக்களை குழப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை வன்மையாக கண்டிக்கிறோம்" -அதியமான், ஆதித் தமிழர் பேரவைத் தலைவர்

'மினிக்கி.. மினிக்கி..' பாடலின் வீடியோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மினிக்கி.. மினிக்கி..' பாடலின் வீடியோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

ரயில்வே திட்டங்களுக்கான நிதி; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டிற்குட்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு அதிகளவு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நீலகிரி: கல்லக்கொரை : நாயை கவ்வி சென்ற சிறுத்தையின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது

நீலகிரி: கல்லக்கொரை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற சிறுத்தையின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!


இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

கிராமின் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கேரளா: வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட குடும்பத்தினரிடம் EMI கேட்கும் வங்கி; வாழ வழியில்லாதவர்களிடம் வட்டி கேட்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள கிராமின் வங்கியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

"தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் 2 1/2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு;


ரயில் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களால், இன்று இரவு 9 மணிக்கு பதிலாக 11:30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்"


- தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்

நாமக்கல்லை சேர்ந்த மாணவன் ரஜினிஷ் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்


சென்னை அயனப்பாக்கம் மாணவர் சையது 2வது இடம்


சென்னை சேத்துப்பட்டு மாணவி சைலஜா 3வது இடம்


 

‘வாழை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வாழை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் படம் ரிலீஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வௌியாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமனம்!

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமனம்!

ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பொற்கொடியை பிடித்து போலீசார் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியதில், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு என தகவல்..


ஆந்திராவில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பொற்கொடியை பிடித்து போலீசார் விசாரணை

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2479 மில்லியன் கன அடியாக உள்ளது!


1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 86 மில்லியன் கன அடியாக உள்ளது!


500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 306 மில்லியன் கன அடியாக உள்ளது!

ஜிகா வைரஸ் முன்னெச்சரிக்கை; தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

Background


  • கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

  • வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அப்போதைய மத்திய ஆட்சியில் முக்கிய பங்காற்றியவர் கருணாநிதி – ராஜ்நாத் சிங் புகழாரம்

  • கருணாநிதி நினைவு நூற்றாண்டு நாணயத்தை வெளியிட துணை நின்ற பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

  • யாரிடம் இருந்தும் குடியுரிமையை சி.ஏ.ஏ. பறிக்காது – மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு

  • தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஆணையராக நியமனம் – விரைவில் புதிய தலைமை செயலாளர் அறிவிப்பு?

  • இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மாரடைப்பால் மரணம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் நேரில் அஞ்சலி

  • மாமல்லபுரம் நடைபெற்ற காத்தாடி திருவிழா நிறைவு

  • மலேசிய பிரதமர் இன்று இந்தியா வருகை

  • நீலகிரி மாவட்டம் மசினகுடியில் உள்ள 38 விடுதிகளை இடிக்க உத்தரவு

  • கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு கால்பந்து ரசிகர்கள் போராட்டம்

  • பெண் மருத்துவரின் படுகொலை விவகாரத்தில் சூர்யகுமார் யாதவ் பரபரப்பு பதிவு

  • ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்தபோது அவமதிக்கப்பட்டேன் – சம்பாய் சோரன் வேதனை

  • அமெரிக்க அதிபர் தேர்தல்; டொனால்ட் டிரம்பை மிக மோசமாக விமர்சித்த கமலா ஹாரீஸ்

  • ரஷ்யா மீதான பாலத்தை குண்டு வீசி தகர்த்த உக்ரைன் ராணுவம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.