Breaking News LIVE: ஜம்மு காஷ்மீரில் முதற்கட்ட வாக்குப்பதிவில் 58.85 % வாக்குகள் பதிவு.!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
Breaking News LIVE: ஜம்மு காஷ்மீரில் ஒன்றிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப் பதிவில் 58.85 % வாக்குகள் பதிவாகியுள்ளது.
கேரளாவின் புகழ்பெற்ற புலிக்களி நடனம் திருச்சூரில் களைக்கட்டியது.. ஏராளமானோர் பங்கேற்பு!
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ரேஸ் கோர்ஸ் சாலையில் தர்ணா போராட்டம்
தெலங்கானா: பழங்குடியின மக்கள் வாழும் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளி கட்டடம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததால், கலெக்டர் நிதியில் இருந்து ₹13 லட்சம் எடுத்து, மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளியை அமைத்த மாவட்ட ஆட்சியர் திவாகர் 25 நீளமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த கண்டெய்னர் பள்ளியை, அம்மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்கா திறந்து வைத்து பாடம் எடுத்தார்
திருவண்ணாமலை: பெளர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் நேற்று பக்தர்கள் கிரிவலம் சென்றதையடுத்து, அங்கு இருக்கும் குப்பைகளை அகற்ற 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல நூற்றூக்கணக்கான பக்தர்கள் ரயில் நிலையத்தில் காத்திருப்பு.. திருப்பதி செல்லும் ரயிலில் முண்டியடித்து ஏறிச் சென்றனர்.
கிரிவல நாட்களில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை!
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2212 மில்லியன் கன அடியாக உள்ளது!
1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 58 மில்லியன் கன அடியாக உள்ளது!
500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 297 மில்லியன் கன அடியாக உள்ளது!
ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
Background
- இந்திய பிரதமர் மோடி வரும் 21ம் தேதி அமெரிக்காவிற்கு செல்கிறார் – குவாட் கூட்டத்தின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
- குவாட் கூட்டத்தில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி ஐநா சபையில் பங்கேற்று பேசுகிறார்
- ஐ.நா. சபையில் பங்கேற்று பேசும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து பேசுகிறார்
- 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் – முதற்கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
- காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் சுமூகமாக நடைபெறுவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் படுதீவிரம்
- தமிழ்நாட்டிற்கு இன்னும் 100 ஆண்டுகளுக்கு தி.மு.க. தேவை – முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின்
- முழுமையாக நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மிகச்சிறந்த மாநிலமாக மாற்றுவோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதில் என்ன தயக்கம்? – முன்னாள் எம்.பி. பழனிமாணிக்கம் வலியுறுத்தல்
- சென்னை நந்தனத்தில் நடைபெற்ற கட்சியின் பவள விழாவில் தோன்றிய கருணாநிதி – ஏஐ தொழில்நுட்பத்தால் அசத்தல்
- தி.மு.க. பவளவிழாவில் முன்னாள் எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்பட 6 பேருக்கு விருதுகள்
- தொழில் முதலீட்டில் தென் மாவட்டங்களை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது – மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
- தென்மாவட்டங்கள் மீது தொழில் முதலீட்டில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் – மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்
- விடுதலை சிறுத்தைகளின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முறையாக அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தீவுத்திடலுக்கு நேரில் சென்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய நடிகர் விஜய்
- திராவிட சாயத்தை பூசிக்கொண்டுள்ளார் நடிகர் விஜய் – முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்
- புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம். திருச்செந்தூர் கடலில் தீபம் ஏற்றி வழிபாடு - ஆயிரக்கணக்கில் போலீஸ் பாதுகாப்பு
- கொல்கத்தாவில் நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்த ஆலோசனை – அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர மருத்துவர்கள் முடிவு
- பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியின் புதிய முதலமைச்சர் ஆனார் அதிஷி
- ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி – சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -