Breaking News LIVE 18th OCT 2024: ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 18 Oct 2024 09:38 AM
Breaking News LIVE 18th OCT 2024: ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்

Gold Rate : ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்


22 கேரட் ஆபரணத் தங்கம்:  கிராமுக்கு ரூ.640 உயர்ந்து, சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 19,000 கன அடியாக அதிகரிப்பு.


தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை 6வது நாளாக இன்றும் நீடிக்கிறது

பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து.


8 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


தீ விபத்து ஏற்பட்டதும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், 4 ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன

பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை

சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்

சென்னை மாவட்டத்தில் இன்று (அக். 18) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background


  • ஏர் இந்தியா உள்பட 10 விமானங்களுக்கு நேற்று ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் – போலீசார், அதிகாரிகள் தீவிர விசாரணை

  • கடந்த நான்கு நாட்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை

  • ஜஸ்டின் ப்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்திய – கனட உறவில் விரிசல் – இந்தியா கருத்து

  • லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர்களை நாடு கடத்த கனடா மறுப்பு

  • சென்னை மற்றும் புறநகரில் இன்று அதிகாலை மிதமான மழை

  • தொடர் மழை பெய்த கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் 14 ஆயிரம் டன் குப்பைகள் அகற்றம் – மாநகராட்சி தகவல்

  • அசாமில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டது – விபத்து நடந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

  • நாட்டின் வளர்ச்சி ஏழைகளை அதிகாரமிக்கவர்களாக மாற்றுகிறது – பிரதமர் மோடி பேச்சு

  • சண்டிகரில் நடைபெற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் – என்.டி.ஏ. கூட்டணியில் சலசலப்பு

  • சூதாட்ட செயலியில் நடித்த விவகாரம் ; நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை

  • மும்பையில் தைவான் நாட்டு தூதரகம் திறக்கப்பட்டதற்கு சீனா கடும் எதிர்ப்பு

  • தைவான் விவகாரத்தை இந்தியா விவேகத்துடன் கையாள வேண்டும் – சீனா எச்சரிக்கை

  • மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூபாய் 19.60 லட்சம் கோடி – கடந்த 10 ஆண்டுகளில் 182 சதவீதமாக அதிகரிப்பு

  • வயநாடு இடைத்தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்காவை எதிர்த்து சத்யன் போட்டி

  • மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்

  • மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் தொகுதி குறித்து இந்தியா கூட்டணி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் அகிலேஷ் யாதவ்

  • ரயில்களில் முன்பதிவு செய்யும் கால வரைவு 120 நாட்களில் 60 நாட்களாக குறைவு

  • உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை

  • உத்தரபிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு 2 தொகுதிகளை தர சமாஜ்வாதி திட்டம்

  • யு.ஜி.சி. நெட் தேர்வு முடிவுகள் வெளியானது; பாடவாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியீடு

  • மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா


 


                                        

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.