Breaking News LIVE: “மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” - ராஜ்நாத் சிங்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

ABP NADU Last Updated: 18 Aug 2024 08:26 PM
“மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” - ராஜ்நாத் சிங்

“மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் கலைஞர்” கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு.

அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி - முதலமைச்சர் ஸ்டாலின்

அரசியல் என்ற இலக்கியத்திற்கு இலக்கணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி என கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

Breaking News LIVE: கலைஞர் நூற்றாண்டு நாணயம் வெளியீடு

Breaking News LIVE: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். அமைச்சரிடம் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் ரூ. 100 கலைஞர் நினைவு நாணயத்தை பெற்றுக் கொண்டார். 

Breaking News LIVE: கலைஞர் நூற்றாண்டு நாணயம் சற்று நேரத்தில் வெளியீடு
இன்னும் சற்று நேரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது.

கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின், கலைவாணர் அரங்கத்திற்கு புறப்பட்டனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். இன்னும் சற்று நேரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கம் எதிரில் அம்பேத்கர், திருவள்ளுவர் வேடமணிந்து நிற்கும் மாணவர்கள்.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை வரவேற்க, சென்னை கலைவாணர் அரங்கம் எதிரில் அம்பேத்கர், திருவள்ளுவர் வேடமணிந்து நிற்கின்றனர் மாணவர்கள்.

கோவை : தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தில் புகுந்த யானைக் கூட்டம்

கோவை: நேற்று இரவு தொண்டாமுத்தூர் அருகே உள்ள குப்பேபாளையத்தில் புகுந்த யானைக் கூட்டத்தை, சத்தம் போட்டு விரட்டிய விவசாயிகள். தோட்டத்துக்குள் யானைகள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க கண்காணிப்பில் ஈடுபட்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. யானைகளிடமிருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என வனத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

கலைஞர் நினைவு நாணய விழா.. சென்னை வந்தடைந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை விமான நிலையத்திலிருந்து அடையாறில் உள்ள கடற்படை தளத்திற்கு புறப்பட்டார்

Thangalaan Box Office : தங்கலான் : உலகம் முழுவதும் ₹53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ₹53.64 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் அரிய பொருட்கள் கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் முத்திரைகள், விளக்கு, கல்பந்து, கல்லால் ஆன சில்வட்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்..

இன்று ஞாயிறு விடுமுறை நாள் மற்றும் நாளை பௌர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. 4 மணிநேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்: திநகரில் இன்று கூட்டம்

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் முக்கிய பேச்சு வார்த்தை கூட்டம் சென்னை தியாகராயநகரில் இன்று நடைபெறவுள்ளது!


கமல், தனுஷ், சிம்பு உள்ளிட்ட நடிகர்கள் மீதான புகார், நடிகர்களின் சம்பள விவகாரம், ஸ்ட்ரைக், நடிகர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது வைத்துள்ள புகார்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன

நிவாரண நிதி வழங்கிய திருச்சூர் செத்திக்கோட்டு ராமச்சந்திரன் யானையின் ரசிகர் மன்றத்தினர்!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ₹1 லட்சம் நிதியை கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய திருச்சூர் செத்திக்கோட்டு ராமச்சந்திரன் யானையின் ரசிகர் மன்றத்தினர்!

பெரம்பூர் வந்த ரயிலில் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல்..

பெரம்பூர் வந்த ரயிலில் இருந்து 16 கிலோ கஞ்சா பறிமுதல்..


டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் சென்னை பெரம்பூர் வந்தபோது, ரயில்வே பாதுகாப்பு போலீசார் சோதனை செய்ததில் முன்பதிவு இல்லாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் இருந்து 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கலைஞர் நாணய வெளியீடு: வாழ்த்து தெரிவித்த பிரதமர்.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

கொல்கத்தா சம்பவத்தைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்கள் குறித்து 2 மணிநேரத்திற்கு ஒருமுறை அப்டேட் அளிக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

கருணாநிதி நினைவு நாணய வெளியீடு; இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்

கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டை முன்னிட்டு இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Background


  • ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தாயகம் திரும்பினார்

  • தாயகம் திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமான நிலையம் முதல் சொந்த ஊர் வரை உற்சாக வரவேற்பு

  • முடிவு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உருக்கம்

  • மருத்துவர்கள் பாதுகாப்பு விவகாரம்; பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்

  • கொல்கத்தா மருத்துவர் கொலை; இந்தியா முழுவதும் வலுக்கும் போராட்டம்

  • உபரி நீர் வந்ததன் காரணமாகவே அத்திக்கடவு – அவினாசி திட்டம்; அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்

  • கருணாநிதி நூற்றாண்டு நாணயம் இன்று வெளியீடு; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வருகை

  • கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

  • சென்னையில் மழைநீர் வடிகால் ஆய்வு பணிகள – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு

  • ஹரியானா அரசியலில் புது திருப்பம்; ஜனநாயக ஜனதா கட்சியில் இருந்து 4 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

  • ரூபாய் 20 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளதாக பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா மீது புகார்

  • நடிகர் விஜய் நடித்த கோட் பட ட்ரெயிலர் நேற்று ரிலீஸ்; உற்சாக வரவேறபு

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விறுவிறுப்பு; வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.