Breaking News LIVE 17th oct 2024: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 17 Oct 2024 06:02 PM

Background

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் – சென்னைவாசிகள் நிம்மதிசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும்மழையின் தாக்கம் குறைந்ததால் புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகள் இன்று...More

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் - சென்னை உயர்நீதிமன்றம்

கொலை வழக்கில் ஆயுள் கைதியாக புழல் சிறையில் உள்ள வீரபாரதி தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரி மனு செய்திருந்தார். அதில் முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் எனவும் அதை ஆளுநர் மீற முடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளது. மனுதாரரை முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ளுநர் கட்டுப்பட்டவர்; அதை ஆளுநர் மீற முடியாது.