Breaking News LIVE: வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Breaking News LIVE 16th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
சுகுமாறன்
Last Updated:
16 Dec 2024 12:31 PM
வங்கக்கடலில் உருவாகியது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி புதியதாக உருவாகியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூற்கு உற்சாக வரவேற்பு
உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷூற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Background
- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இன்று மக்களவையில் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஒத்தி வைத்தது மத்திய அரசு
- மாநில உரிமைகளை பா.ஜ.க.விடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி – சட்ட அமைச்சர் ரகுபதி
- தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு; இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- அ.தி.மு.க. தீர்மானத்தில் ஒரே ஒரு தீர்மானத்தை மட்டும் ஆதரிப்போம் – அமைச்சர் எவ வேலு
- நேற்று முன்தினம் உருவான கட்சிகள் கூட மாயையை உருவாக்க முயற்சி – தவெகவை விமர்சித்த அமைச்சர்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜூனா அறிவிப்பு
- ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்குவது நோக்கம் அல்ல – திருமாவளவன்
- எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் செய்வது மட்டும்தான் – தினகரன் விமர்சனம்
- மதுரை ஆதனூரில் விசிக கொடி கம்பத்தை அகற்றக்கோரி வருவாய்த்துறையினர் நோட்டீஸ் – பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் புழல் சிறைக்கு மாற்றம்
- ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறை என்று சட்டம் கொண்டு வர வேண்டும் – பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
- கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும்
- உலகப்புகழ் பெற்ற தபேலா ஜாம்பவான் ஜாகிர் உசேன் காலமானார்
- புதுச்சேரி அரசு ஹோட்டலை தான் விலைக்கு கேட்கவில்லை – இயககுனர் விக்னேஷ் சிவன் விளக்கம்
- 3 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரக்குமார திசநாயகே
- இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு – மத்திய அமைச்சர்
- மகாராஷ்ட்ராவின் புதிய அமைச்சர்களாக 39 பேர் பதவியேற்பு
- டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லியில் போட்டி
- பிரிஸ்பேனில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் அவுட்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -