Breaking News LIVE 14 Sep: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - பிரதமர் மோடி பேச்சு

உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான முக்கிய நிகழ்களை உடனடியாக அறிய, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் இணைந்திருங்கள்

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 14 Sep 2024 06:43 PM
காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு



காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், இன்று காலை காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக குறைந்த நிலையில், மாலை நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான காளிதாஸின் மறைவை ஒட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் கருணாகரனின் தந்தையும் மத்திய அரசின் உளவுத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான காளிதாஸின் மறைவை ஒட்டி அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பாஜகவால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

பாஜகவால் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியும் - தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

கோவை: பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவராக செயல்பட்டு வந்த சதீஷ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவிப்பு கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் நடவடிக்கை என விளக்கம்

அன்னபூர்ணா விவகாரம் குறித்து மத்திய அரசை கண்டித்த நடிகர் கருணாஸ்

"ஒட்டுமொத்த வியாபாரிகளையே அவமானப்படுத்தியுள்ளார் மத்திய நிதியமைச்சர், இதைவிட ஒரு சர்வாதிகாரம் என்ன இருக்க முடியும்? மக்களிடம் இருந்து பெறக்கூடிய ஜிஎஸ்டி வரியில் இருந்து அம்பானி, அதானி போன்றவர்களை வளர்த்துவிடுவதற்கு நான் ஏன் உழைக்க வேண்டும்..? " - அன்னபூர்ணா விவகாரம் குறித்து மத்திய அரசை கண்டித்த நடிகர் கருணாஸ்

Gold Rate : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.54,920-க்கும், ஒரு கிராம் ரூ.6,865-க்கு விற்பனை

"எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றபோது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை" - CM மு.க.ஸ்டாலின்

"எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றபோது, 10% ஒப்பந்தம் கூட நிறைவேறவில்லை.. அதை வெளியில் சொன்னால் அவருக்கு அவமானம்" அமெரிக்காவில் இருந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு!

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 33.01% நீர் இருப்பு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 33.01% நீர் இருப்பு உள்ளது.

இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் உதவி

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களது பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஆண்டுதோறும் ₹10 லட்சத்தை நன்கொடையாக அளிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்! இந்த முன்னெடுப்பின் முதற்கட்டமாக ₹5 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.வி.உதயகுமாரிடம் வழங்கினார்!

Background


  • 17 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • முதலமைச்சரின் அமெரிக்க பயணம் - 18 நிறுவனங்கள் உடன் ரூ.7,616 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அறிக்கை

  • தமிழ்நாடு முழுவதும் இன்று டி.என்.பி. எஸ்.சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெறுகிறது - 2,327 பணியிடங்களுக்காக 7.90 லட்சம் பேர் பங்கேற்பு

  • தமிழ்நாட்டிற்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு உரிய நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் - மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை ஒதுக்க கோரிக்கை

  • தங்களது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக Spotlight Live concerts-ஐ நாளை சென்னையில் நடத்துகிறது Hyundai நிறுவனம் - வர்த்தக மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

  • தமிழ்நாட்டில் 9 ஊர்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது வெயில் - அதிகபட்சமாக மதுரையில் 100.64 டிகிரி வெயில் பதிவு

  • சிறையில் இருந்து ஜாமினில் வெளியான அரவிந்த கெஜ்ர்வாலுக்கு உற்சாக வரவேற்பு - மன வலிமையும், தைரியமும் 100 மடங்கு அதிகரித்துள்ளதாக பேச்சு

  • தனக்கு முடி வெட்டிய நபருக்கு பரிசளித்த ராகுல் காந்தி - இன்வெர்ட்டர், 2 நாற்காலிகள் போன்றவற்றை அனுப்பினார்

  • அந்தமான் நிகோர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரின் பெயர் மாற்றம் - ஸ்ரீவிஜயபுரம் என திருத்தி மத்திய அரசு அறிவிப்பு

  • வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

  • மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

  • லக்னோவில் ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே ஊழியர் அடித்துக் கொலை 

  • சீனாவில் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

  • ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 14 பேர் சுட்டுக் கொலை - தாலிபன் அரசு கண்டனம்

  • அமெரிக்காவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு

  • சென்னையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி - 21 தங்கம் உட்பட 48 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.