Breaking News LIVE: நாளை, 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கிய மீனவர்கள்!
சென்னைக்கு நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளை லாரிகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
ஈரோடு நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாநகரின் கருங்கல்பாளையம், பன்னீர் செல்வம் பூங்கா, மூலப்பாளையம், திண்டல், வீரப்பன் சத்திரம், சம்பத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
"₹50,000 செலவு பண்றதுக்கு பதிலாக இந்த ₹1,000 அபராதத்தை கட்டிடலாம் சார்" :
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கரணை மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். வெள்ளத்தில் இருந்து கார்களை காப்பாற்ற வேறு வழி தெரியவில்லை என கார் உரிமையாளர்கள் தங்களின் அச்சத்தை, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்
வேளச்சேரி மேம்பாலத்தை தொடர்ந்து பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்தப்பட்ட கார்களுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார். மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை செவ்வாய்க்கிழமை (15.10.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Hemanth In Actress Chithra Case : சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கில் இருந்து கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நவம்பர் 5ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
கவரப்பேட்டை ரயில் விபத்து - 10 பேருக்கு ரயில்வே போலீசார் சம்மன்.
சிக்னல் பிரிவு, என்ஜினியர் பிரிவு பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேர் இன்று பகல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது ஏற்கனவே 16 பேருக்கு சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் 10 பேரிடம் விசாரிக்க திட்டம்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் இணைப்புப் பணி நிறைவடையாததால், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தல். சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் உட்பட 180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவு.
"இந்தியாவிலேயே பள்ளிக்கல்விதுறையில சிறப்பா செயல்படுற மாநிலத்துக்கு திடீர்னு நிதியை நிறுத்துனா எப்படி?" - தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய SSA நிதி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
2024 - 2025ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!
"மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை மணலியில் உள்ள உரம் உற்பத்தி தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தம்.
தீபாவளி போனஸ், உயிரிழந்த ஒப்பந்த ஊழியருக்கு இழப்பீடு, செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்
"இயற்கை வழக்கத்திற்கு மாறாகப் பெருமழைப்பொழிவை ஏற்படுத்தினாலும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்வோம்" - திமுக அறிக்கை
கோவையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல். கோவையின் பல பகுதிகளில் நள்ளிரவு வரை மழை வெளுத்து வாங்கிய நிலையில், காலையில் மழை நின்றுவிட்டதால் மக்கள் வாழ்கையில் இடையூறு இல்லை!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், நாளை மறுநாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Background
- வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது; காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்பதால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு
- சென்னை உள்பட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை – சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி
- கனமழை அபாயம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர்
- மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் – தொண்டர்களுக்கு தி.மு.க. உத்தரவு
- கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, சாலைகளிலும் வெள்ளம்போல தேங்கிய மழைநீர் – மக்கள் பெரும் அவதி
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முட்டுக்காடு முகத்துவாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு
- நான்கு நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் – புதுச்சேரி மீனவர்களுக்கு எச்சரிக்கை
- தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு; முன்கூட்டியே தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு குறைக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைப்பு
- 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது
- தொழில்நுட்ப தேர்வுகளுக்கான போட்டித் தேர்வு இன்று தொடங்குகிறது – 554 பணிகளுக்கு 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்
- கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாளை மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம்
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
- பாபா சித்திக் கொலைக்கு ஏக்நாத் ஷிண்டே அரசுதான் பொறுப்பேற்பு – ராகுல்காந்தி
- ஹரியானா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிர ஆலோசனை
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகையை வழங்க நடவடிக்கை – அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்த பின் உத்தரவாதம்
- தொடர் விடுமுறை முடிந்து நேற்று முதல் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பிய வெளியூர்வாசிகள்
- இந்தியா – அல்ஜீரியா இடையேயான நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் புதிய ஏவுகணை சோதனை மையம் அமைக்க திட்டம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -