Breaking News LIVE, AUG 14: அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு மறுப்பு - உச்சநீதிமன்றம்

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 14 Aug 2024 06:33 PM
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்திப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து பேசியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி. 

அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனு நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது . 


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் மனுவானது நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Breaking News LIVE, AUG 14: தமிழ்நாட்டில் தலித் முதலமைச்சராக முடியாத சூழலா? கார்த்தி சிதம்பரம் கருத்து!

தமிழ்நாட்டில் தலி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக ஆக முடியாத சூழல் நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், எம்.பி. தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார். இவர் சொன்ன கருத்து சரிதான் என எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE, AUG 14: சுதந்திர தினம் - ஆளுநர் தேநீர் விருந்து - திமுக புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பாதாக திமுக புறகணிப்பதாக அறிவித்துள்ளது. மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாய் நிவாரணம் - கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 6 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

Breaking News LIVE, AUG 14: சூலப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா - விபத்து!

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாடு, சில கோயில்களில் திருவிழா நடைபெறும். விழுப்புரம் கண்டாச்சிபுரத்தில் சூலப்பிடாரி அம்மன் கோயில் தூக்கு தேர் சரிந்ததில் பக்தர்கள் காயமடைந்தனர். எதிர்பாராத விபத்து ஏற்பட்டதால் மக்கள் அதிரிச்சியடைந்தனர்.

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Breaking News LIVE, AUG 14: செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு - ஆக.20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவத்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் -14 ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஒராண்டு காலமாக சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




 

செந்தில் பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறை அவகாசம்!

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking News LIVE: தேசிய கொடி ஏந்தி பேரணி செல்ல பாஜகவுக்கு உயர்நீதிமன்ற அனுமதி

சுதந்திரத்தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி பேரணி செல்ல பாஜவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கொடியை மரியாதையுடன் கண்ணியமாக ஏந்தி செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பேரணிக்கு தடை விதிக்ககூடாது எனவும் டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாடப்புத்தகங்களின் விலை உயர்வு - இபிஎஸ் கண்டனம்

பள்ளிப்பாட புத்தகங்கள், போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தும் வேலையை முதல்வர் ஸ்டாலின் கனகச்சிதமாக செய்கிறார். பாடப்புத்தகங்களின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE: மத்திய அரசை கண்டித்து மதிமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வைகோ தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Breaking News LIVE: 78 வது சுதந்திர தினம்: மதுரை விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

 


இந்திய நாடு முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் விமான நிலையம் சார்பில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்தில் வாகன தணிக்கை,பார்கிங், பயணிகள் வருகை  இடம், புறப்பாடு,பழைய சோதனை சாவடி பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking News LIVE: விடுமுறை நாட்கள்: விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு

 


சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் இரு மடங்கு உயர்ந்துள்ளது. 


சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக சொந்த ஊர்களுக்கு செல்வதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி; அடையாமடையில் 13 செ.மீட்டர் மழை பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 13 செ.மீட்டர் மழை பதிவாகியது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

Background


  • நாளை நாட்டின் 78வது சுதந்திர தினம்; நாடு முழுவதும் கொண்டாட்டத்திற்கு தயாரான மக்கள்

  • மருத்துவர்கள் மீதான தாக்குதலை தடுக்க சட்டம் அமல்படுத்தப்படும் வரை போராட்டம் தொடரும் – ஒரு தரப்பு அறிவிப்பு

  • ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் – இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் மனு மீதான தீர்ப்பு 3வது முறையாக ஒத்திவைப்பு

  • தமிழ்நாட்டில் ரூபாய் 44 ஆயிரத்து 125 கோடிக்கான 15 முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் – நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

  • தமிழ்நாட்டில் புதியதாக முதலீடு செய்யப்பட்டுள்ள 15 முதலீடுகள் மூலமாக 24 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

  • சுதந்திர தின கொண்டாட்டம்; ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு – தி.மு.க. கூட்டணி கட்சிகள்

  • திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரழப்பா? தமிழகம் முழுவதும் குளிர்பான ஆலையில் அதிகாரிகள் ஆய்வு

  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்து விட வேண்டும் – கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை

  • தமிழ்நாட்டில் துணைவேந்தர் இல்லாமல் மிகப்பெரிய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதால் கல்வியாளர்கள் வேதனை

  • செபி தலைவர் மாதவியை பதவி நீக்கம் செய்யக்கோரி வரும் 22ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

  • சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்

  • டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரமோத் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.