Breaking News LIVE: பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
சுகுமாறன்
Last Updated:
13 Oct 2024 08:27 AM
பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது
தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Background
- புதுக்கோட்டை மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை –சாலைகளில் சூழ்ந்த மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கொட்டித் தீர்த்த பெருமழை; மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் புகுந்ததால் மக்கள் சிரமம்
- நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
- தேசிய வாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொலை – மகாராஷ்ட்ராவில் பெரும் பரபரப்பு
- தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டதால் ஒட்டுமொத்த மகாராஷ்ட்ராவிலும் பதற்றம் அதிகரிப்பு
- பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
- சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்கின் உடலுக்கு சல்மான்கான், சஞ்சய் தத் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் அஞ்சலி
- விபத்திற்குள்ளான கவரப்பேட்டை ரயில் நிலைய வழித்தடத்தில் ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது – இன்று காலை 8 மணி முதல் ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடையும் என தகவல்
- கவரப்பேட்டை ரயில் விபத்து ஓட்டுநர் தவறா? சிக்னல் கோளாறா? சதித்திட்டமா? என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
- இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு முறை ரயில் விபத்து – மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
- ரயில் விபத்துகள் தொடர்வதை ஏற்க முடியாது; பயணிகள் பாதுகாப்பில் குறை இருக்கக்கூடாது – மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன்
- உலகளாவிய பட்டினி குறீயீடு 105வது இடத்தில் இந்தியா; இந்தியாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகளவு இருப்பதாக ஆய்வில் தகவல்
- ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்காக அரப்பணிப்போடு செயல்படும் இயக்கம் – பிரதமர் மோடி
- பா.ஜ.க. ஒரு பயங்கரவாத கட்சி – காங்கிரசை நகர்ப்புற நக்ஸல் என்று மோடி கூறியதைத் தொடர்ந்து கார்கே விமர்சனம்
- தமிழக வெற்றிக் கழக மாநாட்டை சிறப்பாக நடத்த 27 குழுக்கள் அமைப்பு
- ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க.வில் விரிசல்; சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முக்கிய தலைவர்கள் தனித்துப் போட்டியிட முடிவு
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ரவுடி அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – இதுவரை 26 பேர் மீது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது
- வங்கதேசத்தில் இந்து பண்டிகைகள் கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
- நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டிய இந்தியரில் கவுதம் அதானி முதலிடம் – முந்தைய ஆண்டை காட்டிலும் 4.4. லட்சம் கோடி அதிகம் கிடைத்ததாக தகவல்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -