Breaking News LIVE 13 Nov : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 13 Nov 2024 06:55 PM
Breaking News LIVE 13 Nov : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சு

அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது எனவும் போராட்டம் வாபஸ் குறித்து மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Breaking News LIVE 13 Nov : நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் விக்னேஷ்

 


சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.


 

Breaking News LIVE 13 Nov : அரசு மருத்துவரை தாக்கிய விவகராம் - போராட்டம் வாபஸ் பெற்ற மருத்துவர்கள் சங்கம்!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தி தாக்கப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்த போராட்டம் வாப்ஸ் பெறப்பட்டுள்ளது. 

Breaking News LIVE: கிண்டி மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டம் 

 


கிண்டி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


தாக்கப்பட்ட அரசு மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
போராட்டம் அறிவித்துள்ள அரசு மருத்துவர்களுடன் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 

அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை

மருத்துவமனையில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபரிடம் காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். 

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்!

பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்!


அந்த நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பொறுப்புள்ள அரசியல்வாதி இதுபோன்ற காரணங்களைக் கூறக்கூடாது எனத் தெரிவிப்பு.


கோவையில் அக்.27ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

”அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் "இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

ஈ.வெ.ராமசாமிக்கு ‘பெரியார்’ என்ற பட்டம் சூட்டப்பட்ட நாள் இன்று!

Named Periyar  : ஈ.வெ.ராமசாமிக்கு ‘பெரியார்’ என்ற பட்டம் சூட்டப்பட்ட நாள் இன்று.


1938-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில், தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமிக்கு, “பெரியார்” என்னும் பட்டம் சூட்டப்பட்ட நாள் இன்று 


 

Doctor Balaji Cancer Department Guindy Oncologist : பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

 


Doctor Balaji Cancer Department Guindy Oncologist : பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி


சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு கத்திகுத்து.


குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார். இது தொடர்பாக மேலும் ஒருவர் கைது.


பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Chennai Guindy Doctor Stabbed: சென்னை, கிண்டி மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து

Chennai Guindy Doctor Stabbed: சென்னை, கிண்டி மருத்துவமனையில், மருத்துவருக்கு கத்திக்குத்து


சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், புற்றுநோய் பிரிவில் பணியாற்றிவரும் பாலாஜி என்னும் மருத்துவருக்கு கத்திக்குத்து. மர்ம நபர் தப்பியோட்டம்

11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.


செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.


மழையின் காரணமாக 100 கன அடி நீரும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக 315 கன அடி நீர் என மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடி நீர் வரத்துள்ளது!

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கம்பி வேலி அமைக்கப் பயன்படும் கல் கம்பங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கம்பி வேலி அமைக்கப் பயன்படும் கல் கம்பங்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!


ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியானில் மோதி கவிழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்.


லாரியில் இருந்த இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்!


ஊரகப்பகுதியைச் சேர்ந்த அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வுத்துறையின் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


நவம்பர் 12 முதல் 20ம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். -அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

பிரியங்கா காந்தி, தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியை பார்வையிட்டார்.

வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியை பார்வையிட்டார். 14.71 லட்சம் வாக்காளர்களை கொண்ட வயநாடு தொகுதியில் 17 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி போட்டி!

வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 

ஜார்க்கண்டில் விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்

ஜாரக்கண்ட் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் இன்று மழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Background


  • ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு

  • கேரளாவின் வயநாடு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு; பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு

  • வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவும் தொடர்ந்து 2வது நாளாக மழை

  • தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  • கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

  • தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

  • 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி – சீமான் அறிவிப்பு

  • தமிழக முதலமைச்சருக்கு சாராய ஆலைகள் உள்ளது என்பதால் கள்ளுக்கடை இல்லை – முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்

  • பஞ்சாப் மாநிலத்தில் கடும் புகை மூட்டம்; புகைமூட்டத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்

  • உத்தரபிரதேச அரசுத்தேர்வுப்பணியாளர் ஆணையம் முன்பு தேர்வர்கள், மாணவர்கள் போராட்டம்

  • காஷ்மீர் சிறப்பு சட்ட விவகாரம்; காங்கிரஸ் பாகிஸ்தான் போல பேசுகிறது – பிரதமர் மோடி

  • பா.ஜ.க. தனது பணக்கார நண்பர்களுக்கு அதிக பணம் வழங்குகிறது – ராகுல்காந்தி பேச்சு

  • தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதானி – மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் அஜித்பவார் குற்றச்சாட்டு

  • மக்களவைத் தேர்தலில் அமித்ஷா. ஜேபி நட்டா ஹெலிகாப்டர்களிலும் சோதனை – தேர்தல் ஆணையம்

  • கோயில் பூசாரி தற்கொலை வழக்கு; ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு

  • குஜராத்தில் ரயில் பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு – விரைந்து செயல்பட்ட மீட்பு படைகள்

  • திருப்பூர் மாவட்டம் வேலப்பன்சாவடி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை

  • புதுச்சேரி கொலை மிரட்டல் வழக்கில் சரண் அடைந்த ரவுடிக்கு ஜாமீன் மறுப்பால் ரவுடி தப்பியோட்டம்

  • தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  • ஈரோட்டில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை – 2 பேர் கைது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.