Breaking News LIVE: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே காணலாம்.
அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பணிக்கொடையை (Gratuity) தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
Breaking News LIVE: தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை அநிஷா தங்கம் வென்றார்.
காஞ்சிபுரம்: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் வருகின்றனர். இந்நிலையில், அவர்களுடன் அரசு தரப்பில் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிப்பு செய்து ஆதார் ஆணையம் அறிவிப்பு. ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் உடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 3 மாத கால அவகாசத்துடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
தென்காசி: குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
திருப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அழைத்துச் செல்லப்பட்ட மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி: குற்றால அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது!
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தீப்பிடித்ததில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Background
- ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு
- இட ஒதுக்கீடு குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ராகுல் காந்தி வலியுறுத்தல்
- பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு – இன்று காலை 8 மணிக்குத் தொடக்கம்
- நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் திடீர் மழை – விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
- காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம் இன்று 102வது முறையாக கூடுகிறது – 20 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு தமிழகம் கோரிக்கை
- தமிழக வெற்றிக் கழக மாநாடு எப்போது? நடிகர் விஜய் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு; மே.வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பயிற்சி மருத்துவர்கள் நிபந்தனை
- ஆதார் அட்டை எப்போதும் காலாவதியாகாது – மத்திய அரசு
- கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய வழக்கு; சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
- வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உடல் இன்று நல்லடக்கம் – வணிகர்கள் அஞ்சலி
- உயிர் உள்ள வரை தொகுதிக்கான பணிகளைச் செய்து கொண்டிருப்பேன் – அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- தமிழக இளைஞர்கள் சினிமா மற்றும் மதுபோன மோகத்தில் உள்ளனர் – அன்புமணி ராமதாஸ் வேதனை
- தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்; அறிக்கை அளிக்க கேரள முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவு
- வங்கதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இன்று சென்னை வருகை
- நீரவ் மோடியின் ரூபாய் 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
- போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் மனு தள்ளுபடி
- நடிகர் தனுஷிற்கு விதிக்கப்பட்டு இருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதாக தகவல் – தயாரிப்பாளர் சங்க நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதாக தகவல்
- அமெரிக்க அதிபர் தேர்தல்; பாப் பாடகிக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்
- உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -