Breaking News LIVE: வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் திறப்பு
Breaking News LIVE 12th Dec 2024: தமிழ்நாட்டில் இன்று நடக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
சுகுமாறன்
Last Updated:
12 Dec 2024 11:26 AM
வைக்கத்தில் புனரமைககப்பட்ட பெரியார் நினைவகம் திறப்பு
கேரளாவின் வைக்கத்தில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின் மற்றும் பினராயி விஜயன் இணைந்து திறந்து வைத்தனர்.
சாத்தனூர் அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
மழை காரணமாக தஞ்சையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், கரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக திருவள்ளூர் மற்றும் கரூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Background
- வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை
- தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் தற்போது வரை 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
- சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
- தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
- அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை என 27 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்று
- பலத்த சூறைக்காற்ருறு காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
- கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை
- ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
- கேரளாவில் இன்று நடைபெறும் வைக்கம் நூற்றாண்டு விழாவில் தமிழக, கேரள முதலமைச்சர்கள் இன்று பங்கேற்பு
- முதலமைச்சரின் மருமகன் சபரீசன் அதானியை சந்திக்கவில்லை என்று மறுத்தால் ஆதாரத்தை வெளியிட தயார் – அண்ணாமலை
- அதானி நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு ஒப்பந்தம் கொடுத்தது உண்மை – அண்ணாமலை திட்டவட்டம்
- உலகளவில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியதால் பயனாளர்கள் அவதி
- பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
- காஷ்மீரில் விடாமல் பெய்யும் பனிப்பொழிவு; ஆர்வத்துடன் குவியும் சுற்றுலா பயணிகள்
- இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் குளிர்; பொதுமக்கள் கடும் அவதி
- அமெரிக்க அறக்கட்டளையிடம் நிதி உதவி; காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் மறுப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -