Breaking News LIVE, 11 Sep: டெல்லி அளவு இந்தியாவை சீனா ஆக்கிரமித்துள்ளது: ராகுல்காந்தி பகீர் குற்றச்சாட்டு
Breaking News LIVE, 11 Sep: உள்ளூர் தொடங்கி உலகம் வரையிலான முக்கிய நிகழ்வுகள் தொடர்பான, தகவல்களை உடனடியாக பெற ஏபிபி நாடு லைவ் பிளாக்கிள் இணைந்திருங்கள்
டெல்லி அளவுக்கு இந்திய நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், சீனாவுடனான எல்லைப் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி சரியாகக் கையாளவில்லை என்றார்.
“எங்கள் பிரதேசத்தில் சீனப் படைகள் அமர்ந்திருப்பதற்கான காரணம் ஏன் என எனக்கு தெரியவில்லை. லடாக்கில் டெல்லியின் அளவு நிலத்தை சீனப் படைகள் ஆக்கிரமித்துள்ளது. அது ஒரு பேரழிவு என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.
"அண்டை நாடு தனது நிலப்பரப்பில் 4,000 சதுர கிலோமீட்டர்களை ஆக்கிரமித்தால் அமெரிக்கா எப்படி நடந்துகொள்ளும்? எந்த ஜனாதிபதியும் அதை நன்றாகக் கையாண்டதாகச் சொல்லித் தப்பிக்க முடியுமா? திரு. மோடி சீனாவை சரியாக கையாண்டார் என்று நான் நினைக்கவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
பணி நேரத்தை 8 மணி நேரமாக நிர்ணயிக்க வேண்டுமென சாம்சங் நிறுவன ஊழியர்கள் காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும் மதுவிலக்கை ஆதரிக்கின்றன என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமா “மதுவிலக்கில் தமிழ்நாடு ஏன் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கக்கூடாது? தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி திமுக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சிகளும் மதுவிலக்கை ஆதரிக்கின்றன” எனத் தெரிவித்தார்
விவாகரத்து தொடர்பாக தன்னிடம் எதுவும் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். கணவரிடம் மனம் விட்டு பேச சந்திக்க பலமுறை முயன்றேன்.அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று ஆர்த்தி ரவி கூறியுள்ளார்.
சென்னை வண்டலூர், பொத்தேரி, கிண்டி என மூன்று இடங்களில் ரயில்களில் அடிபட்டு 3 பேர் உயிரிழந்தனர். வண்டலூர் அருகே மின்சார ரயிலில் அடிபட்டு பீகாரைச் சேர்ந்த பப்பு குமார் என்பவர் உயிரிழந்தார். அதேபோல், பொத்தேரி அருகே விழுப்புரத்தைச் சேர்ந்த ராமுவும் கிண்டியில் 25 வயது இளைஞரும் உயிரிழந்தனர்.
துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் சோதனையில் ஈடுபட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கழிவறையை சுத்தம் செய்யும் உபகரணத்திற்குள் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
Background
- வணிகர் சங்கங்கள் பேரவை அமைப்பு தலைவர் த. வெள்ளையன் காலமானார் - முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல்
- வணிகர் சங்கங்கள் பேரவை அமைப்பு தலைவர் த. வெள்ளையன் மறைவு - வடமாவட்டங்களில் இன்று முழு கடையடைப்பிற்கு அழைப்பு
- விசிக சார்பில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவிற்கு அழைப்பு - தேர்தல் அரசியலை கடந்து அணுக வேண்டும் என திருமாவளவன் கருத்து
- ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் கோப்பை ஆளுநர் ரவி நிராகரித்ததற்கு நீதிமன்றம் அதிருப்தி - தகுந்த காரணங்களை கூறாமல் நிராகரித்தது ஏன் என சரமாரியாக கேள்வி
- மகாவிஷ்ணு விவகாரம்: பள்ளிக் கல்வித்துறையின் விசாரணை அறிக்கை ஓரிரு நாட்கள் தாக்கல் என தகவல்
- பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்
- கடவுளுடன் நேரடி தொடர்பு என்பது போன்ற பிரதமர் மோடியின் கருத்துகள் தற்போது வரலாறாகிவிட்டது - ராகுல் காந்தி விமர்சனம்
- நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது தேசத்துரோகம் போன்றது - ராகுல் காந்தி மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
- ஹரியான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - மாநில பாஜக துணை தலைவர் சந்தோஷ் யாதவ் கட்சியிலிருந்து விலகல்
- வன்முறை அதிகரிப்பால் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல் - கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
- உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிந்ததும் போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள் - கொல்கத்தா காவல் ஆணையர், சுகாதாரத்துறை செயலர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
- அமெரிக்க அதிபர் தேர்தல் - கமலா ஹாரிஸ், டொனால்ட் டிரம்ப் இடையே இன்று வாக்குவாதம்
- செனகல் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி
- வியட்நாமை புரட்ட் எடுத்த சூறாவளி பயணம் - 87 பேர் பலி
- ஹங்கேரியில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடக்கம் - சாதிக்கும் முனைப்பில் இந்திய வீரர்கள்
- தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி - சென்னையில் இன்று தொடக்கம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -