Breaking News LIVE 11 OCT 2024: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு..

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 11 Oct 2024 10:55 AM
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,760க்கும், ஒரு கிராம் ரூ.7,095க்கும் விற்பனை

மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்

தமிழக மக்களுக்கு ஆயுத பூஜை வாழ்த்து கூறிய த.வெ.க. தலைவர் விஜய்

ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் ஆயுத பூஜை வாழ்த்து கூறியுள்ளார். 

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. 

Background


  • தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாட்டம்; நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் இன்று மக்கள் வழிபாடு

  • ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்

  • சென்னை மற்றும் புறநகரில் நேற்று இரவு கொட்டித் தீர்த்த கனமழை- வெளியூர் செல்லும் மக்கள் அவதி

  • திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பு

  • மும்பை, தானேவில் கொட்டித் தீர்த்த கனமழையால் அங்கு முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

  • இந்தியா – ஆசிய நாடுகள் இடையே நட்பு, ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் – பிரதமர் மோடி பேச்சு

  • லாவேஸில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் முக்கிய தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

  • கரூரில் காதல் விவகாரத்தில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய 2 பெண்கள் உள்பட ஒரு கும்பல் கைது; நகைக்கடையை கொள்ளையடிக்க திட்டமிட்டதும் அம்பலம்

  • கொல்கத்தாவில் மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம்; பல மருத்துவர்கள் உடல்நிலை பாதிப்பு

  • ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவு கடிதத்திற்காக காத்திருக்கும் தேசிய மாநாடு கட்சி

  • டெல்லியில் ஒரே வாரத்தில் ரூபாய் 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

  • தமிழ்நாட்டிற்கான மாநில நிதி பகிர்வாக ரூபாய் 7 ஆயிரத்து 268 கோடியை மத்திய அரசு விடுவித்தது

  • இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தவர்களின் வீடுகளுக்கு ஆள் சேர்த்தவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை

  • இந்திய அரசியலமைப்பை விட எந்த மத நம்பிக்கையும் பெரியதல்ல – கேரள உயர்நீதிமன்றம்

  • தி.மு.க. கூட்டணியில் கருத்து வேறுபாட்டால் புகைச்சல் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  • திருவள்ளூரில் அரசுப் பேருந்தில் டயர்களை ஏற்றிச் சென்றதால் பொதுமக்கள் கடும் சிரமம்

  • உத்தரபிரதேச இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் – அகிலேஷ் யாதவ்

  • நடிகை சமந்தா – நாகசைதன்யா மீது சர்ச்சை கருத்து; தெலங்கானா அமைச்சர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.