Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
Breaking News LIVE: தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது. பாஜவுடன் ஒட்டும் இல்லை, உரவும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக உறுதியாக அறிவித்துவிட்டது. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் - இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் வரும் 15ஆம் தேதி வரை கனமழை தொடரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானத்தின் இருக்கையிலேயே தனது செல்போனை தவறவிட்டார். சிலமணி நேரம் கழித்து செல்போன் இல்லாதது நியாபகத்திற்கு வந்ததும் தகவலை போலீசாரிடம் கூறினார் ஓபிஎஸ். இதையடுத்து சுமார் 40 நிமிடங்கள் கழித்து செல்போனை கண்டுபிடித்து ஓபிஎஸ்சிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறுவதை ஒட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 16, 17, 23, 24 ல் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெறுவதை ஒட்டி நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தியுள்ளது. தற்காலிக பொருப்பாளர்கள் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.
சென்னை பிராட்வேயில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் ₹822.70 கோடி மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடத்தை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு.
தன்னை சந்திக்க வீட்டிற்கு வந்த பழ நெடுமாறனை வாசலில் நின்று வரவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவரான நல்லகண்ணுவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறு முதலமைச்சரிடம் அழைப்பிதழை வழங்கினார்
நடிகை கஸ்தூரி முன்ஜாமின் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல். இந்த மனு மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்
நாளை விசாரணைக்கு வர உள்ளது.
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அண்ணாமலையார் கோயிலில் காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், வேலூர் சரக டிஐஜி தேவராணி மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்!
Ulaganayagan Kamalhaasan KH : "கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும்" : நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை
"உலக நாயகன்" உள்ளிட்ட எந்த அடைமொழியும் வேண்டாம். கமல் என்றோ KH என்றோ குறிப்பிட்டால் போதும்" -நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை
உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளை வெளிநபர்களை வைத்து மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை
மத்திய அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருட்கள் விற்பனை - அரசுக்கு ₹2364 கோடி வருவாய்!
மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு, பின்பு பயன்படாமல் போன, தேவையற்ற பொருட்களாக மாறிய காகிதங்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை விற்பனை செய்ததில், மத்திய அரசுக்கு ரூ.2364 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.
தமிழ்நாட்டில் இன்றுமுதல் நவ.15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
மதுரை: உசிலம்பட்டி அருகே நேற்று இரவு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரை தாக்க முயற்சி. உடன் வந்த அதிமுக நிர்வாக தினேஷ்குமார் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி! தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அமமுக நிர்வாகிகள் என கூறப்படும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பேரையூர் டிஎஸ்பி சித்ரா தேவி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை!
செய்யாறு புறவழிச் சாலையில் ஆந்திராவில் இருந்து வந்தவாசிக்கு 10 டன் வெங்காய மூட்டை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு லாரி 5 மணி அளவில் சாலையின் நடுவே சாலையின் நடுவே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!
மதுரை: செல்லுார் கண்மாய் வலது புற கரையிலிருந்து வைகை ஆறு வரை ₹15 கோடி மதிப்பில் கான்கிரீட் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம். கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி. 2 மாதங்களில் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், கால்வாய் அமைக்கப்பட்ட பின்பு கூடுதலான தண்ணீர் செல்லூர் கண்மாயிலிருந்து ஆற்றுக்கு நேரடியாக கொண்டு செல்வதால் செல்லூர் மக்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் எனவும் அமைச்சர் தெரிவிப்பு!
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்கிறார்.
Background
- உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று பதவியேற்பு – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்
- பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் அறிவிப்புக்கு தொழிலாளர்கள் வரவேற்பு
- திராவிடம் வேறு; தமிழ் தேசியம் வேறு என்று கூறுவது அரசியல் அறியாமை – சீமானுக்கு திருமாவளவன் பதில்
- வங்கக்கடலில் இன்று அல்லது நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
- கருணாநிதிக்கு பிறக்கவில்லை என்றால் மு.க.ஸ்டாலின் கவுன்சிலர் கூட ஆகியிருக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி பேச்சு
- டெல்லி கணேஷ் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி – முதலமைச்சர், தலைவர்கள் இரங்கல்
- திருச்சி விமான நிலையத்தில் சுமார் 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் – மலேசியாவில் இருந்து வந்த பயணிகளிடம் விசாரணை
- மறைந்த பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உடலுக்கு நடிகர் சந்தானம் நேரில் அஞ்சலி
- தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு; கஸ்தூரியைப் பிடிக்கத் தனிப்படை அமைப்பு
- கோவை புறநகர் பகுதிகளில் உள்ள தாபாக்களில் சட்டவிரோத மது விற்பனை – போலீசார் அதிரடி சோதனை
- திருச்சியில் பேருந்து மீது மோதிய கார் – அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
- மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் 3 ஆயிரம் ஊக்கத்தொகை – மகாராஷ்ட்ராவில் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது காங்கிரஸ்
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு பல நாடுகள் அச்சத்தில் உள்ளன; ஆனால் இந்தியாவுக்கு கவலை இல்லை – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
- மகாராஷ்ட்ரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி கைது
- ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை
- தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -