Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் லைவ் ப்ளாக்கில் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 10 Sep 2024 09:32 PM
Breaking News LIVE: கடலூரில் 4 பள்ளி மாணவிகள் மாயம் - காவல்துறை தீவிர விசாரணை
Breaking News LIVE: மார்க்.கம்யூ பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விரைவில் குணமடைய விழைகிறேன் - முதல்வர் ஸ்டாலின்
: Breaking News LIVE: 5000 நீர் நிலைகளை புனரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

Breaking News LIVE: ஊரக பகுதிகளில் 5000 நீர் நிலைகளை புனரமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக வந்த நிலையில், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் காலமானார்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 365 கிலோ தங்க நகைகள் சரிபார்ப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 365 கிலோ தங்க நகைகளை சரிபார்க்கும் பணி நடக்கிறது.


நகைகளில் உள்ள கற்கள், பிசுறுகள் நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்காலையில் அவை உருக்கப்படும் தங்கக் கட்டிகளாக மாற்றி SBI வங்கியில் டெபாசிட் செய்து, அதற்குப் பதிலாக தங்க பத்திரங்கள் பெறப்பட்டு கோயில் வருவாயில் சேர்க்கப்படும்

Breaking News LIVE: சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்!

Breaking News LIVE: சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கவலைக்கிடம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிகிச்சையில் உள்ளார்


உறவினர் பெண் மீது பாலியல் வன்கொடுமை : பாலசக்தி என்பவர் போக்சோவில் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய உறவுக்கார இளைஞரான பாலசக்தி (22) என்பவர் போக்சோவில் கைது அத்தை வீட்டுக்கு அடிக்கடி பள்ளி மாணவி வரும்போது, அத்தை மகனான பாலசக்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


பள்ளி மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரது தாய் அளித்த புகாரில் பாலசக்தியை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

4 கிலோ தங்க திருவாச்சி காணிக்கையாக வழங்கிய புவனகிரியைச் சேர்ந்த பக்தர் சுலோச்சனா கோவிந்தசாமி!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ₹2.35 கோடி செலவில் 4 கிலோ தங்க திருவாச்சி காணிக்கையாக வழங்கிய புவனகிரியைச் சேர்ந்த பக்தர் சுலோச்சனா கோவிந்தசாமி!

பாஜக அரசைக் கண்டித்து இம்பாலில் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்ற பெண்கள்!

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தாத பாஜக அரசைக் கண்டித்து இம்பாலில் தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்ற பெண்கள்!

கொல்கத்தாவில் இன்று முதல் பணிக்கு திரும்பும் பயிற்சி மருத்துவர்கள்

கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கொல்கத்தா பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்குத் திரும்புகின்றனர். 

Background


  • விவசாயிகளுக்கு பிரத்யே டிஜிட்டல் அட்டை வழங்க நடவடிக்கை – மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை

  • மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் எப்போதும் ஏற்காது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

  • நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழை; ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

  • ஒரே நாளில் 6 பேர் கொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்; தமிழக டி.ஜி.பி. விளக்கம்

  • புற்றுநோய் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு

  • சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை பள்ளிக்குப் பேச அழைத்தது யார்? என்று இன்று காலைக்குள் விளக்கம் அளிக்க தலைமை ஆசிரியை தமிழரசிக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

  • பாவம் செய்தவர்களுக்கு மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும்; அமைச்சர் காந்தி பேசிய வீடியோ வைரல்

  • பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புக்கு வெளிநாட்டில் திட்டம் தீட்டியது அம்பலம் – என்.ஐ.ஏ.

  • ஏற்காடு மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் சிக்கியது

  • கொல்கத்தா மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் மனிதசங்கிலி போராட்டம்

  • கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு போராடிய பயிற்சி மருத்துவர்கள் இன்று முதல் பணிக்கு திரும்ப திட்டம்

  • திருநெல்வேலி ராதாபுரத்தில் முன்விரோதத்தால் எதிர்வீட்டுச் சிறுவன் படுகொலை – பெரும் பதற்றம்

  • வாக்காளர்கள் பட்டியல் பெயர் நீக்கம்; தி.மு.க. புகாருக்கு சத்யபிரதாப் சாஹூ விளக்கம்

  • சென்னையில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் அட்டை வைக்கக்கூடாது – நீதிமன்றம் உத்தரவு

  • போதைப் பொருள் புழக்கத்தால் மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் – நீதிமன்றம் அதிருப்தி

  • உத்தரபிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்ற வந்தே பாரத் – சரக்கு ரயில் இழுத்து வந்தது

  • நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்

  • வியட்நாமில் புயல் பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.