Breaking News LIVE: பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழப்பு

Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

சுகுமாறன் Last Updated: 10 Nov 2024 12:59 PM
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழப்பு

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

நடிகர் டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதனால், அடுத்த சில நாட்கள்  தமிழ்நாட்டில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. 

Background


  • வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – அடுத்த சில நாட்கள் தமிழ்நாட்டில் மழை பொழிய வாய்ப்பு

  • நீலகிரி மாவட்டத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூபாய் 11.75 லட்சம் பறிமுதல் – அதிகாரிகள் தொடர் விசாரணை

  • விருதுநகரில் கள ஆய்வுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு – ரோட் ஷோவில் திரளாக குவிந்த மக்கள்

  • விருதுநகரில் கள ஆய்வுக்குச் சென்ற மு.க.ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார்

  • விருதுநகர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை நேரில் சந்தித்து பேசினார்

  • தென்காசி அரசு மருத்துவமனையில் காகிதத்தில் எக்ஸ்ரே ஜெராக்ஸ் – நோயாளிகள் பெரும் அவதி

  • திரிபுரா மாநிலத்தில் திடீர் பெட்ரோல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் பெரும் அவதி

  • பஞ்சாப், ஹரியானாவில் பயிர்க்கழிவுகள் எரிப்பு – கடும் புகைமூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி

  • பீகார் மாவட்டத்தில் நகைக்கடையில் நடந்த துணிகர கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

  • ஓபிசி சமூகத்தை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி – மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு

  • அரசியல் சாசனத்தை அழிக்க பா.ஜ.க. முயற்சி – ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு

  • அமரன் படக்குழுவை பாராட்ட வேண்டும் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

  • ராகுல்காந்தி கையில் போலி அரசியல் புத்தகம் – ஜார்க்கண்ட் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேச்சு

  • ஒரே நாளில் 2 ஆயிரத்து 153 பேர் பணியிட மாற்றம் – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

  • சின்னசேலத்தில் பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து – பயணிகள் பலரும் காயத்துடன் உயிர் தப்பினர்

  • கிருஷ்ணகிரியில் கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய 4 பேர் கைது

  • தொடர் போர் எதிரொலி; காசாவில் உணவுப்பஞ்சம் உருவாகும் அபாயம் – உலக நாடுகள் கவலை

  • ரஷ்யாவில் பாலியல் அமைச்சகம் உருவாக்க பரிசீலனை

  • இன்று இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 போட்டி – தொடரை வெல்லுமா இந்தியா?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.