Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு

Breaking News LIVE 10th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

சுகுமாறன் Last Updated: 10 Dec 2024 01:57 PM
பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு

பிரசவத்தின்போது பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், தாயும் கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதானி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

அதானி விவாகரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

திருவண்ணாமலையில் திட்டமிட்டபடி மகாதீபம் ஏற்றப்படும் - அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் திட்டமிட்டபடி மகாதீபம் இந்தாண்டும் ஏற்றப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் சி.ஏ.ஜி. அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. 

காலாமானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். 

Background


  • மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதற்கான தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்

  • டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அ.தி.மு.க. செய்த துரோகத்திற்கு நாடாளுமன்ற ஆவணமே சாட்சி – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் கீழ்த்தரமான அரசியல் ஆதாயம் தேடுவது வெட்கக்கேடு

  • ராஜஸ்தானில் 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த சிறுவன் – 5 வயது சிறுவனை மீட்கும் பணியில் தீவிர நடவடிக்கை

  • வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதில் நீடிக்கும் தாமதம் – நகராமல் அதே இடத்தில் நிற்பதால் தொடர்ந்து கண்காணிப்பு

  • தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா நடப்பு மக்களவை கூட்டத்தொடரிலே அறிமுகப்படுத்த அரசு தீவிரம்

  • ராகுல்காந்தி தொடர்ந்து பொய் பிரச்சாரம்; மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

  • நாடாளுமன்றம் செயல்படுவதை மத்திய அரசு விரும்பவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டு

  • மேற்கு வங்க ஆளுநருடன் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

  • நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கருத்துப்படியே இந்தியா இயங்கும் – அலகாபாத் நீதிமன்ற நீதிபதி பேச்சால் சர்ச்சை

  • தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிதி வழங்கவில்லை – மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

  • ஊதிய விவகாரம்; ஒடிசாவில் கடும் குளிரில் நள்ளிரவில் பெண்கள் போராட்டம்

  • ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நாளை பதவியேற்பு

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.