Breaking Live : செங்கல்பட்டு இரட்டைக் கொலை - குற்றவாளிகள் 2 பேர் என்கவுண்டரில் உயிரிழப்பு

தமிழ்நாடு உள்பட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Continues below advertisement

LIVE

Background

கொரோனா மற்றும் டெல்டா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. 

Continues below advertisement
10:12 AM (IST)  •  07 Jan 2022

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறிய 547 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் இரவு நேர ஊரடங்கின்போது விதிகளை மீறியதாக 547 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். 

09:22 AM (IST)  •  07 Jan 2022

செங்கல்பட்டு இரட்டைக் கொலை விவகாரம் - என்கவுண்டரில் 2 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய மொய்தீன் மற்றும் தினேஷ் இருவரும் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளனர். 

09:17 AM (IST)  •  07 Jan 2022

செங்கல்பட்டு இரட்டைக் கொலை - பெண் உள்பட 4 பேர் கைது

செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

09:17 AM (IST)  •  07 Jan 2022

செங்கல்பட்டு இரட்டைக் கொலை - பெண் உள்பட 4 பேர் கைது

செங்கல்பட்டில் நேற்று நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

09:08 AM (IST)  •  07 Jan 2022

டிஜிலாக்கரின் கல்வி ஆவணங்கள் செல்லும் - பல்கலைகழக மானியக்குழு அறிவிப்பு

டிஜிலாக்கரில் உள்ள மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட கல்வி ஆவணங்கள் செல்லும் என்றும், இதை நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பல்கலைகழக மானியக்குழு அறிவித்துள்ளது.