Breaking LIVE : பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் : வெண்கலம் வென்று வரலாறு படைத்த அன்னு ராணி..

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 07 Aug 2022 05:22 PM
Annu Rani Commonwealth 2022 : பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் : வெண்கலம் வென்று வரலாறு படைத்த அன்னு ராணி..

Annu Rani Commonwealth 2022 : பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் : வெண்கலம் வென்று வரலாறு படைத்த அன்னு ராணி..

கத்திப்பாரா அருகே அரசு பேருந்து சேதம்

சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது வழிகாட்டி பலகை விழுந்து விபத்து ஏற்பட்டது. வழிகாட்டி பலகை விழுந்த சம்பவத்தில் அவ்வழியே சென்ற அரசு பேருந்தும் சேதம் அடைந்தது.

வழிகாட்டி பலகை மேலே விழுந்ததில் இருவர் படுகாயம் 

சென்னை கத்திப்பாரா அருகே வழிகாட்டி பலகை மேலே விழுந்ததில் சாலையில் சென்ற இருவர் படுகாயம்.

12 மாவட்டங்களில் நாளையும் மிதமான மழை

திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ஆன்லைன் கேம் நிறுவனங்களிடமும்  கருத்து கேட்பு?

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிப்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிய தமிழ்நாடு அரசு முடிவு.

”பூஜா, உங்க மெடல் கொண்டாடப்படவேண்டியது. நீங்கள் மன்னிப்பு கேட்க தேவையில்லை. உங்களால் நாங்கள் மகிழ்கிறோம்” - பிரதமர் மோடி

இந்தியாவில், 18,738 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று.. கடந்த 24 மணிநேரத்தில் 40 பேர் தொற்று காரணமாக மரணம்.



2 செயற்கைக்கோள்களையும் நிலைநிறுத்த முடியவில்லை

2 செயற்கைக்கோள்களையும்  வெற்றிகரமாக விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியவில்லை. 3 வது நிலையில் 
இருந்து 4 வது நிலைக்கு ராக்கெட் செல்லும்போது செயற்கைக்கோள்கள் வெளியேறிவிட்டன.எஸ் எஸ் எல்வி ராக்கெட்டிலிருந்து முன்னரே செயற்கைக் கோள்கள் வெளியேறியதால் நிலைநிறுத்த முடியவில்லை.

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடக்கும் கூட்டத்தில் தேசிய கல்வி கொள்கை, நகராட்சி நிர்வாகம் பற்றி விவாதம். நிதி ஆயோக் கூட்டத்தில் ம.பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மே.வ முதல்வர் மம்தா உள்ளிட்டோர் பங்கேற்பு.

அவலாஞ்சியில் 11 செ.மீ. மழை பதிவு..!

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அலவாஞ்சி,மேல் பவானியில் தலா 11 செ.மீ. மழை.

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

6 நாட்களுக்கு பிறகு மெயின் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் சிக்னல் துண்டிப்பு..!

முதல் முறையாக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அனுப்பப்ப்ட்ட செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் துண்டிப்பு.

செயற்கைக்கோள் சிக்னல் கிடைப்பதில் சிக்கல்?

எஸ். எஸ். எல். வி. ராக்கெட் சற்றுமுன் நிலை நிறுத்திய 2 செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல் கிடைப்பதில் சிக்கல் என்று இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விண்ணில் பாய்ந்தது SSLV-D1 ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் பாயுந்தது .அதிகாலை 3.18க்கு தொடங்கிய 6 மணிநேர கவுன் டவுன் முடிந்ததை 2 செயற்க்கைக் கோளுடன் பாய்ந்தது.

கருணாநிதி நினைவு நாள்: அரசினர் தோட்டம் முதல் மெரீனா கலைஞர் நினைவிடம் வரை தி.மு.க.வினர் அமைதிப் பேரணி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி. கனிமொழி, ஆர்.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்டவர்களுடன் அமைச்சர்கள் என ஆயிரக்கணக்கானோர் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரீனாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். 

கலைஞர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவு தினம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து தி.மு.க.வினர் அமைதிப் பேரணி . மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியா சென்று கலைஞர் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா காரணமாக காணொளி வாயிலாக நடைபெற்று வந்த நிதி ஆயோக் கூட்டம் இன்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கை, நகராட்சி நிர்வாகம் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.


சென்னை மாநகராட்சியில் வார்டுக்கு தலா 10 முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசியும் இந்த முகாமில் போடப்படுகிறது.


 

முதன்முறையாக SSLV ராக்கெட்டை விண்ணில் ஏவும் இந்தியா!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று முதன்முறையாக SSLV ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இன்று அதிகாலை 3.18 மணிக்கு ராக்கெட்டின் கவுண்ட் டவுன் தொடங்கிய நிலையில், காலை 9.18 மணிக்கு SSLV விண்ணில் பாய்கிறது. 


 

Breaking Live: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம்...அமைதி ஊர்வலம் மேற்கொள்ளும் திமுகவினர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை திமுகவினர் அமைதி ஊர்வலம் மேற்கொள்ள உள்ளனர்.

காமன்வெல்த் தொடர் : 13 தங்க பதக்கங்களுடன் இந்தியா 5வது இடம்..!

காமன்வெல்த் தொடர் : இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 

Background

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான  ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாட்டின் 14வது குடியரசுத் துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 


 நாட்டின் குடியரசுத் தலைவர் பதவி மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வாகியிருந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜெகதீப்தன்கரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்க்ரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.


இதில், ஜெகதீப் தன்கர் 528 வாக்குகளும், மார்க்ரெட் ஆல்வாவும் 182 வாக்குகளும் பெற்றனர். 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று ஜெகதீப் தன்கர் அபார வெற்றி பெற்றார். மார்க்ரெட் ஆல்வா 25.1 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜெகதீப் தன்கர் 72.8 சதவீத வாக்குகள் பெற்றார். 15 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. அதாவது 2.1 சதவீத வாக்குகள் செல்லாதவை.


குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஜெகதீப் தன்கருக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என்ற நிலையில், அவர் 500க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளரான மார்க்ரெட் ஆல்வாவிற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள், தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் வாக்களித்தன. இந்த தேர்தலில், வாக்களிக்கத் தகுதியான 780 நபர்களில் 725 நபர்கள் வாக்களித்தனர். அதாவது, 92.94 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருந்தது.


புதியதாக குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகியுள்ள ஜெகதீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பு முடித்த இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். எம்.பி.யாக பணியாற்றிய இவர் மேற்கு வங்க ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.