Breaking LIVE : ஓபிஎஸ்சுடன் இணைய முடியாது - ஈபிஎஸ்

Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 18 Aug 2022 12:14 PM
கட்சி விரோத செயல்களில் ஈடுபடுபவர் ஓபிஎஸ்

ஜெயலலிதாவிற்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தவர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கின்றனர். அதிமுகவில் கட்சி விரோத செயல்களில் ஓபிஎஸ் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தொண்டர்கள் ஒற்றைத் தலைமையை விரும்பினர்.


 

திமுகவுடன் ஓபிஎஸ் தொடர்பு கொண்டுள்ளார் - ஈபிஎஸ்

அதிமுக அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றனர். கட்சியில் தொடர்ந்து பிரச்சனை 
செய்து கொண்டே இருந்தால் மக்கள் எப்படி அதிமுகவை ஏற்றுக் கொள்வார்கள்?


திமுகவுடன் ஓபிஎஸ் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதை அதிமுகவினர் எப்படி ஏற்பார்கள்? - ஈபிஎஸ் கேள்வி 


 

ஓபிஎஸ்சுடன் இணைய முடியாது - ஈபிஎஸ்

ரவுடிகளை வைத்து அதிமுக அலுவலகத்தையும் எங்கள் தரப்பினரையும் ஓபிஎஸ் தாக்கச் செய்தார். பொதுக்குழுவுக்கு  நாங்கள் அழைப்பு விடுத்த போது  நிராகரித்த ஓபிஎஸ், ஏன் நீதிமன்றங்களையே நாடிச்  செல்கிறார்.

பதவியில் இருக்க வேண்டும் என்பதே ஓபிஎஸ் விருப்பம்

ஓபிஎஸ்சிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை.


கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ், அநாகரிகமாக நடந்து கொண்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? - ஈபிஎஸ்

ஓபிஎஸ் அடிக்கடி அழைப்பு கொடுப்பார் : ஈபிஎஸ்

ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்காமல் அதை ரத்து செய்ய ஓபிஎஸ் முயற்சித்தது எந்தவிதத்தில் நியாயம்?


சசிகலாவை எதிர்த்து தானே ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார்? அவர்களையே அழைப்பது ஏன்? - ஈபிஎஸ்




ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் - ஈபிஎஸ் விளக்கம்

ஒற்றை தலைமை வேண்டுமென அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தெரிவித்தனர். 2663 பொதுக்குழு உறுப்பினர்களும்
அதிமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

சில பேர் அதிமுகவை தன்வசம் கொண்டு போக முயற்சிக்கின்றனர்

அதிமுகவை சில பேர் தன்வசம் கொண்டு போக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம். பொதுக்குழு உறுப்பினர்களால்தான்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர் பதவிகள் உருவாகின.


 


 

எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பு

பசுமைவழிச்சாலையில் ஈபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்

கோரிக்கையை ஈபிஎஸ் ஏற்ப்பாரா? நிராகரிப்பாரா?

அதிமுகவில் ஜுலை 11ல் கூடிய பொதுக்குழு செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஓபிஎஸ் விடுத்த அழைப்பை ஈபிஎஸ் ஏற்பாரா?

இடைக்கால தடை விதிக்க முடியாது -  உச்சநீதிமன்றம்

விரிவான விசாரணை மேற்கொள்ளாமல், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது - ஓபிஎஸ் வழக்கில்  உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.


அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு  விவகாரத்தில், இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ்  கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

செய்தியாளர்களை சந்திக்கவிருக்கும் ஈபிஎஸ்

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்படி பழனிசாமி, சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

கருத்து வேறுபாடுகளால் கட்சியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது - ஓபிஎஸ்

எங்களுக்குள் இருக்கின்ற கருத்து வேறுபாடுகளால், முந்தைய காலங்களில், திமுக ஆட்சியை பிடிக்கும் சூழல் இருந்தது. எங்களுக்குள்  கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால், அதிமுகவில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது - ஓபிஎஸ்

கசப்புகளை மறந்து ஒன்றுபட ஓபிஎஸ் அழைப்பு

மீண்டும் தமிழகத்தில் ஆளும் பொறுப்பிற்கு ஏற்ப கழகம் ஒன்றுபட வேண்டும்; ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நடந்தவை 
நடந்தவையாக இருக்கட்டும், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பரவாயில்ல - ஓபிஎஸ்

மேல்முறையீட்டை அவசரமாக  விசாரிக்க வேண்டும் - ஈபிஎஸ் தரப்பு

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு முன்பு, ஈபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன்  ஆஜராகி கோரிக்கை.


தனிநீதிபதி தீர்ப்புக்கு  எதிரான மேல்முறையீட்டை அவசரமாக  விசாரிக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் கோரிக்கை 

ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு

அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி தரப்பில் 
உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு 

ஓபிஎஸ் அழைப்பை கண்டுகொள்ளாத ஈபிஎஸ்

அதிமுகவினர் அனைவரும் ஒருங்கிணைய செய்தியாளர் சந்திப்பில் ஓபிஎஸ் அழைப்பு விடுத்தபோதே ஈபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு 

ஈபிஎஸ் மேல் முறையீடு - திங்கட்கிழமை விசாரணை

எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு எண்ணிடப்பட்டு வந்தவுடன் திங்கட்கிழமை விசாரிக்கிறோம்- நீதிபதிகள்

அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா - ஓபிஎஸ்

அஇஅதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்பொழுது அவர், அதிமுகவை தொண்டர்களுக்கான இயக்கமாக மாற்றினார் எம்ஜிஆர். அவர் தொடங்கிய இந்த அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று தெரிவித்தார். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டு : முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். 

அதிமுக அலுவலக சாவி : ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் தரப்பிடம் கொடுத்ததற்கு எதிரான ஓபிஎஸ் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

தமிழகத்தும் காவேரி நீர்வரத்து 18, 000 கன அடியாக உயர்வு!

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவேரி நீர்வரத்து 16,000 கன அடியிலிருந்து 18,000 கன அடியாக உயர்ந்துள்ளது. 

கருமுட்டை விவகாரத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம்!

ஈரோடு கருமுட்டை விவகாரத்தில் சிறுமியின் தாய், இடைத்தரகர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கனமழை!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி 

சென்னை வானகரத்தில் 3 குடோன்களில் தீவிபத்து!

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் பிளைவுட் குடோன் மற்றும் அடுத்தடுத்து 3 குடோன்களில் தீ விபத்து ஏற்பட்டது. 

வங்கி கொள்ளை : இருவருக்கு 5 நாள் போலீஸ் காவல்

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் கைதான பாலாஜி, சந்தோஷுக்கு 5 நாள் போலீஸ் காவல்.

Background

சென்னையில் 89வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. 


கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு  நவம்பர் 4-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது.  இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 89ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.18) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.





தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஓரளவு கவலையின்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 










கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


 







- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.