Breaking Live: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்குவாரி விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயர்கல்விக்கு தற்போதைய திமுக அரசு பொற்காலமாக இருக்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
949 ரூபாய்க்கு விற்கப்பட்ட எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகள் இன்று தேசிய பங்குச்சந்தையில் 872 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபாரண தங்கம் ஒரு சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..
சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 7 நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
திண்டுக்கல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் கோடை விழா வரும் 24 ம் தேதி தொடங்க இருக்கிறது.
சென்னையில் 2ம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனைசேவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் கல்குவாரி விபத்தில் உயிரிழப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.
நூல் விலை உயர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் 2வது நாளாக பின்னாலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் எடுப்பட்டு வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
பங்குச்சந்தையில் இன்று எல்.ஐ.சியின் பங்குகள் அறிமுகமாகிறது.
Background
தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -