Breaking LIVE : பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
Breaking LIVE : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை அடுத்தடுத்து ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்தித்தையடுத்து பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துள்ளார்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தியபோது அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உடன் இருந்தனர்
சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திலும் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செய்தார்
வீட்டை விட்டு புறப்பட்டு, ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்
அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும், குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது - ஓபிஎஸ்
கழக நிறுவனர் புரட்சித் தலைவர் அவர்கள் வகுத்தெடுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இனி, கழகத்தின் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திகழும், வெற்றி நடைபோடும் என்பது திண்ணம். - ஓபிஎஸ்
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறும் என ஓபிஎஸ் அறிக்கை
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாலை 4 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறேன். தமிழ்நாட்டின் கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் எடுத்துவைக்க உள்ளேன் - முதல்வர் ஸ்டாலின்
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவருடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது - முதல்வர் ஸ்டாலின்
நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
பொதுக்குழு நடத்துவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்
ஜூன் 23 முன்னர் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். இருவரும் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் கூட்ட வேண்டும்
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, ஈபிஎஸ் அணி மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது
ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு
அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அருந்தானியங்கள், மரபு தானியங்கள் அடங்கிய பெட்டகத்தை குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார்.
குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்
சேலத்தில் தலைவாசல் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆகஸ்ட் 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்குகளில் சென்னை 11:30 மணிக்கு உயர்நீதிமன்றம் தீர்பு வழங்குகிறது
குடியரசு துணைத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணாசாலையில் மாநகர பேருந்துகளின் கண்ணாடியை கல்லூரி மாணவர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு.
டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருடன் நேரில் சந்தித்து பேசினார்.
ஜம்மு - காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு குறித்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது.
Background
பிரதமர், குடியரசு தலைவரை இன்று சந்திப்பதற்காக சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டார். இன்று காலை 11. 30 மணிக்கு புதிதாக பதவியேற்று கொண்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்முவையும், மாலை 4. 30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்வைப்பார் என்றும், செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
முன்னதாக நேற்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு டெல்லி பயணம் குறித்து பேசினார். அதில், “ டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன். காவடி தூக்கப்போகவில்லை என எம்.பி திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும்,பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதற்கு தம்பி திருமாவளவன் உதாரணம். தேர்தல் வரும் போகும், இயக்கங்களும் கொள்கைகளும் எப்போதும் இருக்கும். நமது கூட்டணி கொள்கைக் கூட்டணி அதனை யாராலும் பிரிக்க முடியாது. பாஜகவிற்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். உடன் திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது. தமிழ்நாடு அரசு சனாதனவாதிகளால் அதிகப்படியான தாக்குதலுக்கு ஆளாகிவருகிறது.
பெரியார், அண்ணா, கலைஞரின் திராவிட கருத்துக்களை நிறைவேற்றவே ஆட்சி செய்கிறோம். இந்த விழாவை முடித்து விட்டு டெல்லிக்கு செல்லவிருக்கிறேன். டெல்லிக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன், காவடி தூக்கப் போகவில்லை எனவும் அதிரடியாக கூறியுள்ளார். திமுகவின் கொள்கைகளை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம். விசிகவிற்கும், திமுகவிற்கும் உள்ள உறவு தாய்-பிள்ளை உறவு, இது எப்போதும் தொடரும். பெரியார், கலைஞர் 95 வயதுவரை வாழ்ந்து மக்கள் பணி ஆற்றினர், அவ்வகையில் திருமாவளவனும் மக்கள் பணி செய்யவேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -