Breaking Live : தமிழ் மொழி மற்ற பகுதிகளிலும் பரவ வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 16 May 2022 01:44 PM
துறைமுகம் - மதுரவாயல் சாலை விரிவாக்க ஒப்பந்தம்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் சாலை விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தமிழ் மொழி மற்ற பகுதிகளிலும் பரப்ப வேண்டும்- ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அதில், “தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. தமிழ் மொழியின் சிறப்பு பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். தமிழ் மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக கொண்டு வர வேண்டும். பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழங்களில் தமிழ் மொழிக்கான இருக்கையை அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கோச்சிங் சென்டர் கொள்ளையடிக்கவே நீட் - பொன்முடி

நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்வதாக சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா...?

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 7 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 744க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 56 அதிகரித்து ரூபாய் 37 ஆயிரத்து 952 க்கு விற்கப்படுகிறது.


24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 143க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 114க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 64.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.

பருத்தி, நூல் விலை உயர்வு - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரி  பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பின்னலாடை நிறுவனங்கள் இரண்டு நாள் ஸ்டிரைக்கை தொடங்கியுள்ள நிலையில் முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!

கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் தேர்வாகிறார்.  

நூல் விலை உயர்வு : திருப்பூரில் 2 நாள் ஸ்ட்ரைக்

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

நெல்லை கல்குவாரி விபத்து : உரிமையாளர்கள் மீது 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு

நெல்லையில் கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக,  முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை குவாரி விபத்து : 2 வது நாளாக மீட்பு பணியை தொடங்கிய பேரிடர் குழு

நெல்லை : முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரி 2 வது நாளாக மீட்பு ப்[அணி தொடங்கியது. 

உலகளவில் 52. 11 கோடி பேருக்கு கொரோனா..

உலகளவில் இதுவரை 52. 11 கோடி பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47. 56 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், இந்த கொடிய தொற்றால் இதுவரை 62. 88 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 வரை அவகாசம் நீட்டிப்பு

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. 

Background

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 110. 85 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 100. 94க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.