Breaking Live : நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 15 May 2022 01:24 PM
கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா காலத்தில் பதிவான விதிமுறை மீறல் வழக்குகள் திரும்ப பெற டிஜிபி சுற்றறிக்கை

கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியதாக பதிவான 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியிருந்தன. அந்த வழக்குகள் திரும்ப பெற கோரி டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு !

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்,இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருநெல்வேலி அருகே கல்குவாரி விபத்து - உரிமையாளர் கைது

திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் கல்குவாரி உரிமையாளர் சங்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடி 26-ந் தேதி தமிழகம் வருகை

ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 26-ந் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.

Background

மத்திய அரசால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதனால், விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைவரும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.