Breaking News LIVE: ஆளுநருடன் ரஜினி அரசியல் பேச்சு - மார்க்சிஸ்ட் கண்டனம்

Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

இரவாதன் Last Updated: 09 Aug 2022 09:55 AM
ஆளுநருடன் ரஜினி அரசியல் பேச்சு - மார்க்சிஸ்ட் கண்டனம்

ஆளுநர் மாளிகை அரசியல்பேச்சுக்கான கட்சி அலுவலகமல்ல.. ஆனால் அரசியல் பேசியதாக ரஜினி கூறியுள்ளார் - கே.பாலகிருஷ்ணன்

டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் FBI சோதனை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் நேற்று (ஆக.08) அமெரிக்க உளவுத்துறையான FBI சோதனை

கொரோனா பரவும் அபாயம் - மத்திய அரசு எச்சரிக்கை

பண்டிகைகாலம் என்பதால்  கொரோனா பரவும் அபாயம் - மத்திய அரசு எச்சரிக்கை

செஸ் ஒலிம்பியாட் இன்றுடன் நிறைவு

சென்னை செஸ் ஒலிம்பியாட் இன்றுடன் நிறைவு -  நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

அமைச்சரவை இன்று விரிவாக்கம்

மகராஷ்டிராவில் அமைச்சரவை இன்று விரிவாக்கம் -  முதற்கட்டமாக 15 அமைச்சர்கள் பதவியேற்கலாம் எனத்தகவல்

பீகார் அரசியல் - இன்று ஆலோசனை

பீகாரில் ஆளும் ஐக்கியஜனதாதள கட்சியின் உறுப்பினர் இன்று ஆலோசனை - பாஜக கூட்டணி குறித்து நிதிஷ்குமார் முடிவெடுப்பார் எனத்தகவல்

வெங்கையா நாயுடு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தேசத்தை உங்கள் அனுபவம்  என்றும் வழிநடத்தும் என வெங்கையா நாயுடு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியாக பேசினார்.

எடப்பாடி  பழனிசாமி வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தை  தடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி  பழனிசாமி வலியுறுத்தல்

Background

சென்னையில் 80வது நாளாக பெட்ரோல், டீசல்  மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இது அவ்வப்போது ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்றால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பொதுமக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த நிலையில்  கடந்த 2021ஆம் ஆண்டு  நவம்பர் 4 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5ம், டீசல் விலை ரூ 10ம் மத்திய அரசால் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43க்கும் விற்பனையானது. இதனைத் தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்றதால் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.


அதன்பின் 137 நாட்களுக்குப் பின் மார்ச் 22ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை உயர்ந்து ரூ.110ஐ எட்டியது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விலையைக் குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.இதனிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியைக் குறைத்தார். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. 


இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 80ஆவது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று ( ஆகஸ்ட்.09) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியது.
தற்போது பெட்ரோல் விலை குறைந்த நிலையில் ஏற்றிய அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பார்களா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேசமயம் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமில்லாமல் விற்பனையாகி வருவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த மாதத் தொடக்கத்தில், புதிதாக ஆட்சியேற்ற மகாராஷ்டிரா மாநில அரசு பெட்ரோலின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வாட்) ஒரு லிட்டருக்கு 5 ரூபாயும், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு 3 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததோடு வாக்குறுதியையும் நிறைவேற்றியது.


பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்பிசிஎல்) உள்ளிட்ட பொதுத்துறை ஓஎம்சிகள் சர்வதேச அளவுகோல் விலைகள் மற்றும் அந்நிய செலாவணி விகிதங்களுக்கு ஏற்ப தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையில்ன் ஏற்படும் எந்த மாற்றமும் தினமும் காலை 6 மணி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.