Breaking News LIVE Today : சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
Breaking News LIVE Updates Today Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.
ABP NADULast Updated: 04 Jan 2022 01:11 PM

Background
Breaking News LIVE Today Tamil: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொதுமக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்....More
Breaking News LIVE Today Tamil: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொதுமக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 21 வகை பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், ஒரு முழுக்கரும்பும் வழங்க உள்ளனர்.
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைப்பா? மத்திய அரசி விளக்கம்
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.