Breaking LIVE : செஸ் ஒலிம்பியாட்டில் தொடர் வெற்றிகள்..! இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்திய தமிழக வீராங்கனை..!

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 Jul 2022 08:10 PM
செஸ் ஒலிம்பியாட்டில் தொடர் வெற்றிகள்..! இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்திய தமிழக வீராங்கனை..!

செஸ் ஒலிம்பியாட்டில் இங்கிலாந்து அணியின் தோமாவை தமிழக வீராங்கனை வைஷாலி வீழ்த்தி வெற்றி பெற்றார். 

இந்திய வீரர் அர்ஜூன் எரிகாசி வெற்றி

இந்திய ஓப்பன் பிரிவின் அர்ஜூன் எரிகாசி வெளிநாட்டு வீரரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 

ஐஸ்லாந்து வீரரை வீழ்த்திய தமிழக வீரர்..!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவின் சி அணியில் ஐஸ்லாந்து வீரரை தமிழக வீரர் சேதுராமன் வீழ்த்தி வெற்றி பெற்றார். 

செஸ் ஒலிம்பியாட் : வந்திகா அகர்வால் அபார வெற்றி

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் பிரிவில் வந்திகா அகர்வால் அபார வெற்றி பெற்றார். 

செஸ் ஒலிம்பியாட்டை நேரில் பார்வையிடும் முதல்வர்

செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்று வரும் மாமல்லபுரத்தில் போட்டிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வருகிறார். 

மாணவிக்கு பாலியல் தொல்லை - ஐ.ஐ.டி.யிடம் விளக்கம் கேட்ட காவல்துறை

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக ஐ.ஐ.டி.யிடம் சென்னை காவல்துறை விளக்கம் கேட்டுள்ளது. 

டெல்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா நியமனம்..!

டெல்லி காவல் ஆணையராக, தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார்.

5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு..

தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Bindyarani Devi : காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற பிந்தியாராணி. வாழ்த்திய பிரதமர் மோடி

India Corona Update : இந்தியாவில், இன்று 19,673 பேருக்கு COVID-19 தொற்று உறுதி.. 45 மரணங்கள் பதிவானது

India Corona Update : இந்தியாவில், இன்று 19,673 பேருக்கு COVID-19 தொற்று உறுதி.. 45 மரணங்கள் பதிவானது

ஆசிரியர்களுக்கான வருகை பதிவு : செயலியில் இனி நாளை முதல்..!

மாணவர்கள், ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு நாளை முதல் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

பெட்ரோல் விலையில் மாற்றமா..? இன்றைய விலை நிலவரம்..!

சென்னையில் இன்று ( ஜூலை 31) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது. 

ஆம்பூரில் மத்திய உளவுத்துறையால் இளைஞர் கைது

திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த நீலிக்கொல்லி பள்ளிவாசல் தெருவில் இளைஞர் ஒருவரை மத்திய உளவுத்துறை கைது செய்தது. ஐஎஸ் பயங்கரவாத இயக்குத்துடன் தொடர்பில் இருந்ததாக 15 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்துள்ளனர். 

Background

காமன்வெல்த் போட்டிகளில் இன்று பளுதூக்குதல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மீராபாய் சானு பங்கேற்றுள்ளார். நடப்புச் சாம்பியனான இவர் இம்முறையும் தன்னுடைய தங்கப்பதக்கத்தை தக்க வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் முதலில் நடைபெற்ற ஸ்நாட்ச் பிரிவில் மீராபாய் சானு முதல் முயற்சியில் 84 கிலோ எடையை தூக்கினார். அடுத்து தன்னுடைய இரண்டாவது முயற்சியில் சானு 88 கிலோ எடையை அசத்தலாக தூக்கினார். இதன்மூலம் காமன்வெல்த் போட்டிகளில் 49 கிலோ எடைப்பிரிவில் ஸ்நாட்ச் பிரிவில் சாதனைப் படைத்தார். தன்னுடைய மூன்றாவது வாய்ப்பில் இவர் 90 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினும் அவரால் சரியாக தூக்க முடியவில்லை. 






இதைத் தொடர்ந்து கிளின் அண்டு ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் தன்னுடைய முதல் முயற்சியில் மீராபாய் சானு 109 கிலோ எடையை தூக்கினார். தன்னுடைய இரண்டாவது முயற்சியில் அவர் 113 கிலோ எடையை தூக்கினார். மூன்றாவது முயற்சியில் 115 கிலோ எடையை தூக்க முயற்சி செய்து அதில் தோல்வி அடைந்தார். இருப்பினும் மொத்தமாக ஸ்நாட்ச் மற்றும் கிளின் அண்டு ஜெர்க் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 201 கிலோ எடையை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை படைத்தார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 


முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் 55 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் சன்கித் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதன்பின்னர் ஆடவர் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்று இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் இன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று பதக்கங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.