Breaking Live : தேர்தல் அதிகாரிக்கு ஒபிஎஸ் கடிதம் 

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 Jul 2022 09:23 PM
கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு

கனியாமூர் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு

கனியாமூர் பள்ளியில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் நேரடி வகுப்பு நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அதிகாரிக்கு ஒபிஎஸ் கடிதம் 

அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு பதில் கடிதம். தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என ஓபிஎஸ் கடிதம்.

ஐசிஎப் போலீசார் மீது கொலைவழக்கு பதிய உத்தரவு 

விசாரணை கைதி நித்தியராஜ் மரண வழக்கில் ஐசிஎப் போலீசார் மீது கொலை வழக்கு பதிய ஐகோர்ட் ஆணை. 


 


 


 


 

அதிகாரிகள் உதவி இல்லாமல் ஆக்கிரமிப்பு நடைபெறாது : நீதிபதி

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் உதவி இல்லாமல் நடைபெறாது. நீர்நிலைகள், வறண்ட நிலப்பரப்புகளில் ஆக்கிரமிப்புகள் தமிழகத்தின் சூழலியலை பாதிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் - தலைமை நீதிபதி அமர்வு 

ஆன்லைன் ரம்மிக்கான தடை - தலைமை செயலாளர் ஆலோசனை

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம். புதிய
சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாட்டில் ONGC-க்கு அனுமதி வழங்கப்படாது- அமைச்சர் மெய்யநாதன்

தமிழ்நாட்டில் எண்ணெய் கிணறு அமைக்க ONGC-க்கு அனுமதி வழங்கப்படாது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

சென்னை பள்ளிகளில் பள்ளி இல்ல நூலகம் அமைத்து செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் தீர்மானம். மாமன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

சென்னை மாமன்றக் கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையிலான மாமன்றக் கூட்டத்தில் 98 தீர்மானங்கள் நிறைவேற்றம்.சென்னை மாநகராட்சியில் புவியியல் தகவல் அமைப்பு பிரிவை நிறுவ ஒப்புதல் கோரும் தீர்மானம். காற்றின் தரத்தை கண்காணிக்கும்  நிலையத்தை அமைக்கும் பணிக்கான மதிப்பீட்டிற்கு ஒப்புதல் வழங்கும் தீர்மானம்.

செஸ் தோன்றிய இடத்தில், செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது நமக்கு பெருமை- எல். முருகன்

செஸ் தோன்றிய இடத்தில், செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது நமக்கு பெருமை என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்

ஈ.பி.எஸ் நீக்கம் - ஆணையத்துக்கு ஒபிஎஸ் தரப்பு தகவல்

அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளோம். இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நியமனம் பற்றியும் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது - ஓபிஎஸ் தரப்பு 

திமுக கூட்டணி தொடரும் - முதல்வர் ஸ்டாலின்

சிபிஎம் உடனான கூட்டணி கொள்கை கூட்டணி, அது தொடரும் என மனோரமா நியூஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு. திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல கொள்கைக்கான கூட்டணி. தமிழகத்தில் திமுக தலைமையிலானஆரோக்கியமான கூட்டணி தொடரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

பாஜகவுடன் கூட்டணியா ? விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் வருகையால் திமுக - பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

ஒரே நாடு, ஒரே மொழி என்போர், நாட்டின் எதிரிகள் - முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும்  சாத்தியமில்லை. மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும். மாநிலங்கள் பலமானதாக மாறினால், அது இந்தியாவுக்கு பலம் தானே தவிர வேறில்லை - முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை - முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்கள் சுயமாக தன்னிறைவு பெற்றவையாக இருப்பது தான் இந்தியாவிற்கு பலம் ஆகும். இந்தியாவுக்கு ஒரே ஒரு தேசிய மொழி என்பது எப்போதும் சாத்தியமில்லை  - முதல்வர் 

முன்னாள் பிரதமர் நேரு குறித்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்தியாவின் கூட்டாட்சி முறை குறித்து, நாட்டின் முதல் பிரதமர் நேரு,தொடர்ந்து பேசினார். நாட்டு மக்கள் ஒற்றுமையாக வாழ, மொழி வாரி மாநிலங்களை நேரு ஏற்படுத்தி தந்தார் - முதல்வர்

எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது - முதல்வர் ஸ்டாலின்

நாடாளுமன்றத்தில் முக்கிய பொருள்கள் குறித்து பேசுவதற்கு, எம்.பிக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது - முதல்வர் ஸ்டாலின் 

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் உறுதி

வேற்றுமையில் என்பதை பண்டித ஜவஹர்லால் நேரு தாரக மந்திரமாக கொண்டிருந்தார். இந்தியா என்பது கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்க வேண்டும்; ஆனால், அதற்கு எதிரான செயல்கள் நடைபெறுகின்றன - முதல்வர் ஸ்டாலின்

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தாரக மந்திரம் 

மத்திய அரசை ஒன்றிய அரசு என விளிப்பது ஏன்? என மலையாளத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.

மனோரமா நியூஸ் கான்க்ளேவ் 2022 - முதலமைச்சர் உரை

மனோரமா நியூஸ் நடத்தும் கான்க்ளேவ் 2022 நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இருந்து உரையாற்றுகிறார். மலையாள மொழியிலும் உரையாற்றும் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

பெரியகுளத்தில் 15 செ.மீ. மழைப்பதிவு 

தமிழகத்தில் அதிகபட்சமாக பெரியகுளம் - 15 செ.மீ., வைகை அணைப்பகுதி தேனி - 9 செ.மீ. மழைப்பதிவு. சின்னகல்லாறு, 
டேனிஷ்பேட்டை தலா 2 செ.மீ., மேட்டூர் (சேலம்), தருமபுரி தலா 2 செ.மீ. மழைப்பதிவு.

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு...

சென்னை மாநகராட்சியின் மாதந்திர கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது :

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி துவங்குகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

கள்ளக்குறிச்சி கலவரம் : கைது 322 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக எடுத்த வீடியோ ஆதரவை அடிப்படையை ஆதரவாக கொண்டு மேலும் 4 பேர் கைது. இதையடுத்து : கைது எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை : மா. சுப்ரமணியன்

தமிழ்நாட்டில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

ஆடி 18 : பவானிசாகர் அணை பகுதியை மக்கள் பார்வையிட தடை!

ஈரோடு : 18 ம் நாளன்று பவானிசாகர் அணை பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் மேலும் 20, 408 பேருக்கு கொரோனா தொற்று..!

இந்தியாவில் ஒரே நாளில் 20, 408 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

போனிகபூர் பங்கேற்ற படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு..!

போனிகபூர் பங்கேற்ற படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 



 

8 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமநாதபுரம்: இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 6  மீனவர்களை விடுவிக்கக்கோரி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி 8 நாட்களுக்கு பின் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

Background


கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில், இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


கன்னியாகுமரியில் அறிகுறி:


கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு  பேர் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது குரங்கு அம்மை நோய் பல நாடுகளிலும் கண்டறியப்பட்டு மக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் கேரளா மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அண்டை மாவட்டமான கன்னியாகுமரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த 4 பேருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி காணப்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியான பின்பு தான் குரங்கு அம்மை பாதிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் காணப்பட்டுள்ளதா என்பது தெரிய வரும். தொடர்ந்து கேரளா - தமிழ்நாடு சோதனைச்சாவடிகளில் தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


அமைச்சர் விளக்கம்:


இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது தமிழ்நாட்டில், இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.