Breaking Live : கள்ளக்குறிச்சி கலவரம் - அறிக்கை தாக்கல்

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

கல்யாணி பாண்டியன் Last Updated: 29 Jul 2022 06:27 PM
தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி 

செஸ் ஒலிம்பியாட் - ஓபன் பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி 


 

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை தாக்கியதாக மகா காந்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சிலை கடத்தல் தொடர்புடைய வழக்குகளை சிறப்பு அமர்வே விசாரிக்க கோரும் மனுவில் உத்தரவு பிறப்பிப்பதாக கூறி நீதிபதிகள் 
தள்ளிவைத்தனர். எந்த வழக்கை யார் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதிதான் முடிவெடுப்பார் என்பதால் அவரிடம்தான் முறையீடு செய்ய வேண்டும் நீதிபதிகள்.

63 யூடியூப் தளங்களை முடக்க நடவடிக்கை - காவல்துறை

இரு வாரங்களில் நிலைமை சரிசெய்யப்படும். 63 யூடியூப் தளங்களை முடக்க நடவடிக்கை - காவல்துறை

கள்ளக்குறிச்சி கலவரம் - அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல். ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல் பட வேண்டும் - நீதிபதி 

கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி

கன்னியாகுமரியில் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 பேரும்  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகைச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


கேரளாவில் குரங்கு அம்மை பரவி வரும் நிலையில், 4 பேரின் ரத்த மாதிரிகள் புனே ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு. சிபிசிஐடி புதிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதால் அதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

புதிய கல்விகொள்கை - சுதந்திரத்தை அளிக்கிறது

மாணவர்களுக்கு, புதிய கல்விகொள்கை சுதந்திரத்தை அளிக்கிறது - பிரதமர் மோடி 

வலிமையான அரசாங்கம் என்பது கட்டுப்பாடுகளை விதிப்பது அல்ல - பிரதமர் மோடி

வலிமையான அரசாங்கம் என்பது கட்டுப்பாடுகளை விதிப்பது அல்ல.கடந்தாண்டு வரலாற்றுச் சாதனையாக இந்திய 83 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது - பிரதமர் 

இந்தியாவின் முன்னேற்றத்தை பட்டியலிட்டு பிரதமர் மோடி உரை 

பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை பட்டியலிட்டு பிரதமர் மோடி உரை 

கலாம் தங்கியிருந்த அரை நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது - பிரதமர்

அண்ணா பல்கலைகழகத்தில் கலாம் தங்கியிருந்த அரை நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது - பிரதமர்

கொரோனா பெருந்தொற்றை இந்தியா மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வாகை சூடியது - பிரதமர் 

கொரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் சோதணையாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றை இந்தியா மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வாகை சூடியது - பிரதமர் 

உலகத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா ஆகும்

இளைஞர்கள் தான் வளர்ச்சியின் இன்ஜின்கள். உலகத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா ஆகும் - பிரதமர் 

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. மாணவர்களின் கணவை நிறைவேற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது நன்றிகள்.

அனைவருக்கும் வணக்கம் - பிரதமர் மோடி

அனைவருக்கும் வணக்கம் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

பிரதமரை வழி அனுப்ப ஓபிஎஸ் புறப்பட்டார்

பிரதமர் மோடியை வழி அனுப்ப ஒ.பன்னீர் செல்வம் இல்லத்தில் இருந்து புறப்பட்டார் 

அண்ணா பல்கலைகழகத்தின் 42 வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி

அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி.

மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி

அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி.

அனைவரும் படிக்க வேண்டும் என்பதே, திராவிட மாடல் அரசில் கொள்கை

அனைவரும் படிக்க வேண்டும் என்பதே, திராவிட மாடல் அரசில் கொள்கை ஆகும். இடைநிற்றல் இன்றி, அனைவருக்கும் தடையற்ற கல்வி என்பதே எங்கள் இலக்கு - முதல்வர் ஸ்டாலின் 

பிரதமரிடம் பட்டம் பெற்ற பெருமையோடு எதிர்காலத்திற்குள் நுழைகிறீர்கள் - முதல்வர் பேச்சு

செஸ் ஒலிம்பியாட்  போட்டியை தொடங்கி வைத்த பிரதமருக்கு நன்றி 


பிரதமரிடம் பட்டம் பெற்ற பெருமையோடு எதிர்காலத்திற்குள் நுழைகிறீர்கள். 


யாராலும், எவராலும் திருட முடியாதது கல்வி மட்டுமே


- முதல்வர் பேச்சு 

அண்ணாபல்கலை.கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு..!

பிரதமரை அன்புடன் வரவேற்கிறேன்.  - முதல்வர்


மாணவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள், நீங்கள் நாட்டின் திருவிளக்கு - முதல்வர் 

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் உறுதுணை தேவை..!

தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் உறுதுணை தேவை - அமைச்சர் பொன்முடி

உயர்கல்வித்துறை அமைச்சர் வரவேற்புரை..!

 


உயர்கல்வி பயில்வோர் விகிதத்தில் தமிழகம் முதலிடம் - பொன்முடி 


பெண்கள் உயர்கல்விக்கு சேர்ந்தால் மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க்கப்படும் என்று அறிவித்தவர் நம் முதல்வர். இந்தியாவிலேயே இது முதன்முறையாக நடந்திருக்கிறது. - பொன்முடி 


 

70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக பங்கேற்ற மோடி..!

அண்ணா பல்கலை. கழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தலைமை விருந்தினராக மோடி பங்கேற்றார். 

அண்ணாபல்கலைகழக 42 ஆவது பட்டமளிப்பு விழா - நேரலை வீடியோ..!

                                     

பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கிய முதல்வர்..!

அண்ணாபல்கலைகழக 42 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். 


 





அண்ணாபல்கலை கழகத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..!

அண்ணா பலகலை கழகத்தில் 42 ஆவது பட்டமளிப்பு விழாவிற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் 69 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்களை வழங்குகிறார் 

பாஜக சார்பில் பலத்த வரவேற்பு

பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது

பட்டமளிப்பு விழாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ஆளுநர் மாளிகையில் இருந்து பட்டமளிப்பு விழாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பலி

பெரம்பலூர்: கவுள்பாளையத்தில் உள்ள கல்குவாரியில் பாறை சரிந்து 2 பேர் பலி

சதுரகிரி மலைக்கு செல்ல தடை..!

ஆடி அமாவாசை நாளான நேற்று சதுரகிரி மலைக்கு சென்ற 200 பக்தர்கள் காட்டற்று வெள்ளத்தில் சிக்கினர்.  இதனால் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Breaking Live : குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவியில் 2 நாட்களாக குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் - நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 2 பேர் பலியான நிலையில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!

இன்று நடக்க இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில்,பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் என்.ரவி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. - பாஜக எம்.பி.க்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு 

நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேச்சு - பாஜக எம்.பி.க்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு 

ராஜஸ்தானில் போர் விமான விபத்து - 2 விமானிகள் உடல் கருகி பலி

ராஜஸ்தானில் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 விமானிகள் உடல் கருகி பலி

வரிசோதனை நிறைவு- கணக்கில் வராத பணம் ரூ.150 கோடிக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்..!

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரிசோதனை நிறைவு - கணக்கில் வராத பணம் ரூ.150 கோடிக்கும் மேல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் 

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணியா..? - அண்ணாமலை பேட்டி 

எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் இப்போது கிடையாது - பிரதமர் மோடியை சந்தித்த பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி 

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத்தலைவர், பிரதமர் படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

கமல்ஹாசன் குரலில் காட்சி மொழியாக்கிய கலைஞர்கள்..!

தமிழரின் தொன்மையையும், கடல் கடந்து கொடி நாட்டிய தீரத்தையும் விவரித்த பண்ணாட்டு நிகழ்த்து கலை - பாரம்பரியத்தையும், தனித்துவத்தையும், பண்பாட்டையும் நடிகர் கமல்ஹாசன் குரலில் காட்சி மொழியாக்கிய கலைஞர்கள் 

செஸ் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் சர்வதேச செஸ் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - தமிழ்நாட்டுக்கும், சதுரங்கத்துக்கும் நீண்ட வரலாறு உள்ளதாக விழாவில் உரையாற்றினார். 

Background

செஸ் போட்டிகளிலேயே மிகவும் கவுரவமிக்க தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட் ஆகும். நீண்ட பாரம்பரியமிக்க இந்த தொடரின் 44வது செஸ் ஒலிம்பியாட் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.செஸ் வீரர்களின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 


அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு எதற்காக தம்பி மாஸ்காட் தேர்வு செய்யப்பட்டது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதில்,”தம்பி என்பது சகோதரத்துவத்தின் அடையாளம்.  எங்களுடைய தலைவர் பேரிறஞர் அண்ணா அனைவரையு பாசமாக தம்பி என்று அழைப்பார். அவரை நினைவு கூரும் விதகமாகவும் சகோதரத்துவத்தை நினைவு கூரும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு தம்பி மாஸ்காட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. அதிலும் குறிப்பாக இந்த விளையாட்டு போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணத்தை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வந்துள்ளது இந்தியாவிற்கு மிகவும் பெருமையான தருணம். நான் அவரை தமிழ்நாடு முதலமைச்சர் என்ற சார்பில் வரவேற்கிறேன். 


நம்முடைய பிரதமர் மோடி செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். குஜராத் முதலமைச்சராக இருந்த போது செஸ் விளையாட்டு போட்டியை அங்கு நடத்தினார்.  அத்துடன் புடான் அரச குடும்பம் இந்தியாவிற்கு வந்த போது பிரதமர் மோடி அவர்களுக்கு செஸ் செட்டை வழங்கினார். 


இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் சூழல் உருவாகும் பட்சத்தில் அதை தமிழ்நாடு நடத்த வேண்டும் என்று நான் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். அதன்பின்னர் மார்ச் 16ஆம் தேதி இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். இதற்காக நான் 18 குழுக்களை நியமித்தேன். அதன்பின்னர் 4 மாதங்களில் இந்த ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துள்ளோம்.


இந்தியாவிலுள்ள 75 கிராண்ட் மாஸ்டர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். இந்தியாவின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களின் 36 சதவிகிதம் தமிழ்நாடு வைத்துள்ளது. ஆகவே இந்தியாவின் செஸ் தலைநகரமாக சென்னை விளங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.