Breaking Live : 19 மாவட்டங்களில் இன்று கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 28 Jul 2022 01:02 PM
19 மாவட்டங்களில் இன்று கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கணியாமூர் பள்ளியின் நிர்வாகிகள் ஜாமீன் கோரி மனு தாக்கல்

கணியாமூர் பள்ளியின் தாளாளர் உள்பட கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஜாமீன் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

Breaking Live : காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

வேதாரண்யம் தனியார் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி,மயக்கம் - பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது

4,681 தற்காலிக பேராசியர்களுக்கு பணி நீட்டிப்பு

ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு செய்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்

17 வயது நிரம்பியவர்களே வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

Breaking Live : அதிமுக பொதுக்குழு விவகாரம் - கேவியட் மனு தாக்கல்

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் - பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் தங்கள் தரப்பைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம். அபராத தொகையை இரு வாரங்களில் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்..! பிரதமர் படத்தை சேர்க்க்கோரி நீதிமன்றத்தில் வழக்கு..!

சென்னை செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களுக்கான படங்களில் பிரதமர் மோடியின் படத்தை சேர்க்ககோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சதுரங்க போட்டி வடிவில் மாற்றப்பட்ட கருணாநிதி நினைவிடம்..!

செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் சதுரங்க வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

Background

செஸ் போட்டிகளிலேயே மிகவும் கவுரவமிக்க தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட் ஆகும். நீண்ட பாரம்பரியமிக்க இந்த தொடரின் 44வது செஸ் ஒலிம்பியாட் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.


செஸ் வீரர்களின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச்சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு வருகிறார்.


அங்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி இரவு 7.30 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். விழா நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இன்று இரவு ஆளுநர் மாளிகையிலே பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர், நாளை காலை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி மதியம் 11.50 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.









விழாவில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக செஸ் காய்கள் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், பரதம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் மட்டும் 6 அணிகளின் சார்பில் 30 வீரர்கள் களமிறங்குகின்றனர்.  செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடருக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.