Breaking LIVE :அதிமுக பொதுக்குழு - புதிய வழக்கை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 22 Jun 2022 07:41 PM
புதிய வழக்கை தள்ளுபடி செய்த உரிமையியல் நீதிமன்றம்

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரும் புதிய வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  சி.பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிப்பால் பதற்றம்- இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறும் வானகரத்தில் அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிக்கப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பேனர்களை கிழித்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டு

அதிமுக பொதுக்குழு வழக்கு- சற்று நேரத்தில் உத்தரவு

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில், சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இடைக்கால உத்தரவுக்காக, வழக்கை சற்று நேரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். உத்தரவு தயாரான பிறகு அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

கட்சி விதிகளில் திருத்தம் வேண்டாம் என்கிறார்கள்- நீதிபதிகள்

அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம், ஆனால் கட்சி விதிகளில் திருத்தம் செய்ய கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர் என நீதிபதிகள்  தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரிதான் - ஓபிஎஸ் தரப்பு

பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரிதான். அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்துதான், பொதுக்குழுவில் முடிவு எடுக்க முடியும். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் வைக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது

பொதுக்குழுவில், யாராவது விவகாரத்தை எழுப்பினால் என்ன செய்வது?- நீதிபதி கேள்வி

பொதுக்குழுவில், யாராவது விவகாரத்தை எழுப்பினால் என்ன செய்வது என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். 

ஒருங்கிணைப்பாளரை நீக்க விதிகள் இல்லை- ஓபிஎஸ் தரப்பு

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சியில் விதிகள் இல்லை என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது

பொதுக்குழு கூட்டுவதில் விதிமீறல் இல்லை- இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டுவதில் விதிமீறல் இல்லை, சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் கூட்டப்படுகிறது என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது

விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை- இபிஎஸ் தரப்பு

விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை, தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும் என இபிஎஸ் தரப்பு வாதம். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை சேர்க்க கூடாது- ஓபிஎஸ் தரப்பு வாதம்

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நீங்கலாக, புதிய தீர்மானங்களை சேர்க்க கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய மனு, விசாரணைக்கு உகந்தது அல்ல- இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல, இதனை நிராகரிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் இபிஎஸ் தரப்பு வாதம்.

பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு- இபிஎஸ் தரப்பு வாதம்

பொதுக்குழுதான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு, ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ கிடையாது என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் விதிகளை திருத்த, யாரிடமும் அனுமதி பெற வேண்டியது இல்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் - ஓபிஎஸ் கடிதம்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம்  எழுதியுள்ளார்.

பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டாம் - உறுப்பினர்களுக்கு ஓ.பி.எஸ். கடிதம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஆதார் கட்டாயம்

நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

எடப்பாடி பக்கம் தாவினர் ஓ.பி.எஸ். ஆதரவாளர் மைத்ரேயன்...!

ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளார். 

ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் ஈ.பி.எஸ் பக்கம் மாறினார்

ஓ.பி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் ஈ.பி.எஸ் பக்கம் மாறினார்

இபிஎஸ் அணிக்கு மாறிய ஓபிஎஸ் ஆதரவாளர்; ஆதரவாளர்களின் எண்ணிக்கை 6 ஆக சரிவு

ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளராகவுள்ள வேளச்சேரி அசோக், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஓபிஎஸ்-க்கு ஆதரவான மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 6ஆக சரிவு, இபிஎஸ்-க்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரிப்பு

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிரான வழக்குள் - பிற்பகலின் உயர்நீதிமன்றத்தில் விசாரணை

அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிரான வழக்குகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. 

தேர்தல் ஆணையத்தில் உரிய நேரத்தில் மனு - ஓபிஎஸ் தரப்பு

தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு அளிக்க உள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. பொதுக்குழுவில் ஈபிஎஸ் தரப்பு நிறைவேற்றும் தீர்மானங்களை பொறுத்து தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையிடும் என கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ரா ஆளுநருக்கு கொரோனா..!

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அ.தி.மு.க. தலைமை கழகத்தில் போலீசார் குவிப்பு

அ.தி.மு.க.வில் நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி வீட்டில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்..!

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.எம். சின்னையா வருகை புரிந்துள்ளனர். மேலும், ஓ.பி.எஸ். ஆதரவாளர் வேளச்சேரி அசோக்கும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு - ஓபிஎஸ் கண்டனம்

அதிமுகவில் தற்போது சர்வாதிகார, அராஜகப்போக்கு - ஓபிஎஸ் கண்டனம்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தருமம் மறுபடி வெல்லும்” - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட்

 "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.. தருமம் மறுபடி வெல்லும்” - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் இரட்டைத் தலைமைக்கான விதிகளை நீக்க திட்டமா..?

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமைக்கான விதிமுறைகளை நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்த காரணத்தால் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக காலை 9 மணி முதல் திறக்கப்பட உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிப்பு..!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Background

குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். 


இந்திய குடியரசுத்தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 29 ஆம் தேதியாகும். 


இதில் எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக டெல்லியில்  சரத் பவார் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிற்பதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் துணை தலைவர் பதவியிலிருந்து யஷ்வந்த சின்ஹா வரும் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.


இந்நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்ய நாடாளுமன்ற உயர்மட்டக் குழு இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சந்தித்து பேசியதால் அவர் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 


ஆனால் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற  பழங்குடித் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. இவர் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்த போது அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. 


Abpநாடு தளத்தில் திரெளபதி முர்மு, பாஜகவின் குடியரசுத்தலைவர் தேர்வாக இருப்பார் என கணித்து எழுதியிருந்தோம் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.