Breaking Live : தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானது
கிரைம், அரசியல் உள்ளிட்ட முக்கிய செய்திகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 30ஆக அதிகரித்துள்ளது. 24 பேர் குணமடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத்தகராறில் ஒரு பெண் உட்பட3 பேர் வெட்டிக்கொலை. சிலருக்கு காயம்.
பிரச்னைக்குரிய ஓரிடத்தில் ஒரு தரப்பினர் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக வந்தபோது ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் பெயர் வசந்தா, ஜேசு ராஜ், மரிய ராஜ்
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்றதாக வழக்கில் ,டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 21ஆம் தேதி ஆஜராக டிடிவி தினகரனுக்கு மீண்டும் சம்மன்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Background
பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு பேசியதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜாவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே என்று பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -