Breaking Live: சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
சென்னை நந்தனத்தில் ரூ.40 கோடி மதிப்பில் மாணவர் விடுதி அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என அழைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரில் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்படுகிறது.
பீகாரில் நாளாந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீசப்பட்டது. வெடிகுண்டு வீச்சு தொடர்பாக ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியின் மேடைக்கு அருகே வெடிகுண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமாரை ஒருவர் தாக்கிய சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் இச்சம்பவம் நடந்துள்ளது.

இந்தி திணிப்பை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்றும், cuet தேர்வால் தமிழக மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று படிக்க வாய்ப்புள்ளதாகவும் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அயோத்தியா மண்டப வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகார் குறித்த விசாரணையில் டிடிவி தினகரன் ஆஜரானார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூரில் நகைக்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த நகைக்கடை உரிமையாளரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்து மர்மநபர்கள் 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களை கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் சேர்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Background
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 861 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 36 ஆயிரத்து 132 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு விகதம் தற்போது 0.03 சதவீதமாக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 691 ஆக பதிவாகியுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -